கடந்த ஆண்டு நடந்த இந்த ஏமாற்றத்தால் ரோஹித் அமைதியா உட்காந்துட்டாரு – ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பதிப்பு காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியானது தள்ளி வைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட அந்த போட்டியானது கடந்த ஜூலை 1-ஆம் தேதி துவங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 368 ரன்கள் குவித்து இந்திய அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் எஞ்சியிருந்த 5-ஆவது போட்டியில் மீண்டும் கேப்டனாக டெஸ்ட் அணிக்கு திரும்பிய ரோகித் அந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஐந்தாவது போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் போது ரோகித் சர்மாவிற்கு நடந்த ஒரு சம்பவம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Rohith

அதன்படி கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் கேப்டனாக கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருந்தனர். அவர்கள் இருவரின் தலைமையில் இந்திய அணி முதல் நான்கு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த சமயத்தில் ஒருமுறை ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு ஓய்வறையில் அமைதியாக உட்கார்ந்த சம்பவம் குறித்து ரவி சாஸ்திரி தற்போது பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணி அந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த தொடரில் ரோஹித் சர்மா அற்புதமான பார்மில் இருந்தார். ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடிய போது 83 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அப்போது அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளும் தெரிவித்தனர். ஆனால் ரோகித் சர்மா மட்டும் அமைதியாக வந்து ஓய்வறையில் எதுவும் பேசாமல் சற்று ஏமாற்றம் அடைந்தது போன்று அமைதியாக உட்கார்ந்தார்.

இதையும் படிங்க : பாவம் அதிர்ஷ்டமில்லை, பரிதாப்படும் வகையில் மீண்டும் போராடி நூலிழையில் தோற்ற அயர்லாந்து – நடந்தது என்ன?

இப்படி அவர் அமைதியாக உட்கார காரணம் யாதெனில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடிக்க வேண்டும் என்ற ஆசை வைத்திருந்தார். ஏனெனில் எப்போதுமே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கும் வீரர்களின் பெயர் அந்த மைதானத்தின் கவுரவப் பலகையில் எழுதப்படும். அப்படி ஒரு சதத்தை அவர் விளாச வேண்டும் என்று நினைத்த வேளையில் 83 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கிய வேளையில் அதை அவர் கோட்டை விட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அந்த ஏமாற்றத்தின் காரணமாகவே அவர் அமைதியாக யாரிடமும் பேசாமல் உட்கார்ந்து இருந்தார் என ரவி சாஸ்திரி பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement