எனக்கு என்ன நடக்குதுனே தெரியல.. விராட் கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து – ரவி சாஸ்திரி விமர்சனம்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நடைபெற்று முடிந்து டி20 உலக கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு டி20 வகையிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

விராட் கோலி மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை :

அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடர்களில் அவர் தொடர்ச்சியாக தடுமாறி வருவது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச தொடரில் ஓரளவு சுதாரித்து விளையாடியிருந்தாலும் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் அவர் மூன்று முறை ஆட்டமிழந்தது ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் விராட் கோலி ரன் அவுட்டானது பலரது மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் விராட் கோலி தனது விக்கெட்டை தானே முன்வந்து வழங்கியது போன்று இருந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அணியின் ரன் குவிப்பை அதிகப்படுத்தினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து பலமான நிலையில் இருந்தது.

- Advertisement -

ஆனால் அதற்கடுத்த 8 ரன்களுக்குள் அதாவது 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சரிந்தது. இந்த இன்னிங்சில் விராட் கோலி ரன் அவுட்டானது பலரையும் கோபப்படுத்தும் விதமாக மாறியது. ஏனெனில் பீல்டரின் கைகளுக்கு நேராகவே பந்தை அடித்து விட்டு விராட் கோலி ரன் ஓடி ஆட்டமிழந்தார். அவரது இந்த ரன் அவுட் இந்திய அணியின் சரிவிற்கு மிக முக்கிய காரணமாக மாறியது. இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது :

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் அஷ்வினை விட வாஷிங்டன் சுந்தருக்கு இந்த சாதகம் அதிகம் – சைமன் டவுள் கருத்து

“ஒரு விக்கெட் மிகவும் மோசமான வகையில் வீணாகியுள்ளது”, “விராட் கோலி மனதில் என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது” என்பதை எனக்கு புரியவில்லை என்று நேரலையிலே காட்டமாக விமர்சித்தார். அதேபோன்று மற்றொரு முன்னாள் பயிற்சியாளரான அணில் கும்ப்ளே கூறுகையில் : விராட் கோலி ரன் அவுட்டை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இப்படி போட்டியின் கடைசி சில நொடிகளில் விராட் கோலி அவுட்டாவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அவரது விக்கெட்டை அவராகவே இழந்தது போன்று இருக்கிறது என கும்ப்ளேவும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement