நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து ஏற்கனவே இந்த தொடரை இழந்துள்ள வேளையில் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்றும் நோக்கத்தோடு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் வாஷிங்டன் சுந்தர் அவசியம் :
இந்த தொடர் முடிந்த கையோடு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரானது நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்குகிறது.
இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழக வீரர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பொதுவாகவே வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் போது சுழற்பந்து வீச்சுக்கு பெரிய சாதகம் இருக்காது என்பதனால் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதுமே இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது வழக்கம்.
ஆனால் இம்முறை அப்படி செல்லக்கூடாது எனவும் என்றும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் வீரரான சைமன் டவுள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : வாஷிங்டன் சுந்தருக்கு பந்துவீச்சில் நல்ல திறமை இருக்கிறது. அவர் வீசும் பந்துகள் நன்றாக வழுக்கி செல்கின்றன. அதோடு அவர் இருக்கும் உயரத்தில் இருந்து பந்து வீசும் போது நல்ல பவுன்சும் கிடைக்கிறது.
இதையும் படிங்க : நான் ரிட்டயர்டு ஆகுற வரைக்கும் இது மட்டும் நடக்கக்கூடாதுனு நெனச்சேன் – ரவீந்திர ஜடேஜா வருத்தம்
எனவே ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அவர் தகுதியான நபர் என்று நினைக்கிறேன். அவரது பந்துவீச்சு நிச்சயம் ஆஸ்திரேலியா மைதானத்தில் இந்திய அணிக்கு கைகொடுக்கும். என்னை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் செல்லக்கூடாது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்ந்து வீச்சாளராக ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோருடன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என சைமன் டவுள் கூறியது குறிப்பிடத்தக்கது.



