இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கோலி வீரர்களிடம் ரொம்ப கெடுபிடியாக இருப்பார் – மனம்திறந்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா தகுதி அடைந்து விட்டது. அனைத்து இந்திய ரசிகர்களும் உற்சாகத்துடன் இருந்து வரும் நிலையில் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

indvseng

- Advertisement -

விராட் கோலி ஒரு கேப்டனாக தனது பணியை எப்பொழுதும் முழுவதுமாக செய்து முடிக்க பார்ப்பார் அவருக்கு எதிலுமே முழு வெற்றி வேண்டும் கிரிக்கெட் மீது அளவற்ற தாக்கம் அவரிடம் நிறைய உள்ளது. ஒரு கேப்டனாக அவர் அணியை நாளுக்கு நாள் சிறப்பாக வழிநடத்திச் செல்வது மிகுந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.அவர் எப்போதும் அந்தப் பணியை சிறப்பாகவே செய்வார் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறினார்.

இந்த தொடர் முழுவதுமே இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மிகவும் வியப்பாக உள்ளது கடினமான உழைப்பினால் தனது பேட்டிங்கை அவர் வலுப்படுத்தி உள்ளார். இதை அவர் வருங்காலத்தில் நிச்சயம் செய்து கொண்டே இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,

இனி நடக்க இருக்கும் அனைத்து தமிழக அணிக்கான போட்டிகளில் அவர் நிச்சயம் டாப் 4’இல் தான் விளையாட வேண்டும். ஒருவேளை இதுகுறித்து நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நிச்சயம் தமிழக அணியின் அதிகாரிகள் இடத்திலும் தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடம் நிச்சயம் இது குறித்து பேசுவேன் என்று கூறினார்.

Pant

மேலும் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான பண்ட் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ரவி சாஸ்திரி கோலி இந்திய அணி வீரர்களின் பிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருக்கிறார். அவரை பொருத்தவரை அனைத்து விடயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் வீரர்களின் பிட்னஸ் விடயத்தில் கோலி கராறாகவே இருக்கிறார் என்றும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement