தோனி ரொம்ப கேஷுவலா அந்த முடிவை சொல்லிட்டாரு. எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவிசாஸ்திரி அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியில் தான் செய்த பணி குறித்தும், அணியுடன் இணைந்து இருந்த அனுபவம் குறித்தும் பல விடயங்களை அவர் தற்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விடயம் குறித்த சுவாரசியமான தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அப்பொழுது ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இல்லை என்றாலும் அணியில் டைரக்டராக இந்திய அணியுடன் இணைந்திருந்தார்.

Shastri-1

இந்நிலையில் தோனியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து பேசிய அவர் : 2014ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முடிவடைந்ததும் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அப்போது நான் பயிற்சியாளராக இல்லை என்றாலும் அணியில் டைரக்டராக இந்திய அணியுடன் இருந்தேன். அவருக்கு அடுத்து கேப்டன் வரிசையில் இருப்பது தோனிக்கு தெரியும். இதன் காரணமாக அந்த வாய்ப்பினை கோலிக்கு வழங்க வேண்டும் என்று நினைத்தே அவர் அந்த முடிவை எடுத்தார்.

- Advertisement -

அதேபோன்று அவரால் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட தூரம் விளையாட முடியாது. அதற்கு அவர் உடல் ஒத்துழைக்காது என்பதை தெரிந்துகொண்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை கையில் எடுத்தார். இருந்தாலும் இது எங்கள் அனைவருக்குமே மிக சர்ப்ரைசாக அமைந்தது. ஏனெனில் மெல்போர்ன் போட்டி முடிந்ததும் என்னுடைய டெஸ்ட் கரியர் முடிந்தது என்று என்னிடம் வந்து சொன்னார்.

kohli dhoni

மேலும் அந்த முடிவை எடுத்த தோனி நேராக என்னிடம் வந்து நான் அணி வீரர்களுடன் பேசவேண்டும் கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். உடனே அதற்கு நான் சரி என்று சம்மதித்து வீரர்களை ஒருங்கிணைதேன். அப்போது வீரர்கள் மத்தியில் பேசிய தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என்னுடையடெஸ்ட் பயணம் இதோடு முடிந்தது என்று கூறி டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடன் உரையாடி விட்டு வெளியே வந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே இங்க வேலைக்காகாது. ஓய்வை அறிவித்து அமெரிக்கா பறந்த இந்திய வீரர் – யார் தெரியுமா?

அவர் அப்படிக் கூறியதும் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அது மிகவும் ஷாக்கிங்கா இருந்தது. இதுதான் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் போது நடந்த விடயம் மிகவும் கேஷுவலாக அந்த விஷயத்தை கூறிவிட்டு அவர் வெளியே வந்தார் என ரவி சாஸ்திரி நினைவு கூரறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement