இனிமே இங்க வேலைக்காகாது. ஓய்வை அறிவித்து அமெரிக்கா பறந்த இந்திய வீரர் – யார் தெரியுமா?

Bipul
Advertisement

இந்தியாவில் ஆண்டு தோறும் பல ஆயிரம் இளம் வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து விளையாட வந்தாலும் அவர்களில் வெகு சிலருக்கே தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் டொமஸ்டிக் கிரிகெட் மற்றும் ஐபிஎல் போன்ற தொடர்களில் தான் விளையாடி வருகின்றனர். அப்படி உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் ஒரு சிலருக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

bipul 2

ஆனால் அதிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு வெளிநாடுகளுக்கு சென்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரரான பிபுல் சர்மா இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

- Advertisement -

38 வயதான இவர் இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கிரிக்கெட்டில் மொத்தம் 59 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3012 ரன்களும், 126 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bipul 1

அதோடு 105 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 84 விக்கெட்டுகளையும், 1203 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பல வகையில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தாலும் அவருக்கு இந்திய ஏ அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : டி20, ஒருநாள் கிரிக்கெட் தான் செட் ஆகல. ஆனா டெஸ்ட்ல கோலி வேறலெவல் – அசாருதீன் சாதனை முறியடிப்பு

இதன் காரணமாக விரக்தி அடைத்த அவர் தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்றுள்ளார். இவருக்கு முன்னதாகவே பல வீரர்கள் இதே போன்று இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காமல் அமெரிக்கா சென்றுள்ளனர். அந்த வகையில் தற்போது இவரும் இங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளார்.

Advertisement