டி20, ஒருநாள் கிரிக்கெட் தான் செட் ஆகல. ஆனா டெஸ்ட்ல கோலி வேறலெவல் – அசாருதீன் சாதனை முறியடிப்பு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பாக்சிங் டே போட்டியாக செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் அடித்து நல்ல நிலையில் உள்ளது.

kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்றதன் மூலம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே விராட் கோலி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்தபோது அவருக்கும் டாசில் வெற்றி பெறுவதற்கும் ஏழாம் பொருத்தம் என்பது நாம் அறிந்ததே.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அப்படி கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி வென்ற 30-ஆவது டாஸ் இதுவாகும். இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சேர்த்து கோலி இதுவரை 68 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 30 முறை டாசில் வெற்றி பெற்றுள்ளார்.

Kohli

இதன்மூலம் அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 47 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி 29 முறை டாசில் வெற்றி பெற்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : எப்பேர்ப்பட்ட டீம் இங்கிலாந்து. அவங்களுக்கா இப்படி ஒரு சோதனை – மோசமான சாதனையில் சிக்கி பரிதாபம்

இந்நிலையில் அந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனி 26 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டாசில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement