எப்பேர்ப்பட்ட டீம் இங்கிலாந்து. அவங்களுக்கா இப்படி ஒரு சோதனை – மோசமான சாதனையில் சிக்கி பரிதாபம்

Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டு ஆகிய மைதானங்களில் நடைபெற்று முடிந்த வேளையில் இரு போட்டிகளிலும் பிரமாதமான வெற்றியை பெற்ற ஆஸ்திரேலிய அணியானது 2 க்கு 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடரில் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே போட்டியாக துவங்கி நடைபெற்று வருகிறது.

aus vs eng

- Advertisement -

இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்கிற காரணத்தினால் இங்கிலாந்து அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கி விளையாடி வருகிறது. ஆனாலும் இந்த மாற்றங்கள் அவர்களுக்கு பலனளிக்கவில்லை என்று கூற வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த இன்னிங்சிலும் தங்களது மோசமான ஆட்டத்தை தொடர்ந்தது.

கேப்டன் ஜோ ரூட்டை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேனும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஃபார்மில் இல்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. ஏனெனில் முதல் நாளில் 65.1 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 185 ரன்களுக்குள் சுருட்டியது. அதிகபட்சமாக ரூட் 50 ரன்களும், பேர்ஸ்டோ 35 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 25 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தனது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்கள் குவித்துள்ளது.

Hameed

இங்கிலாந்து அணியை விட இன்னும் 124 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளதால் நிச்சயம் இந்த முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியானது பெரிய ரன் குவிப்பினை வழங்கி இன்னிங்ஸ் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் – மனம்திறந்த ரவி சாஸ்திரி

அதன்படி இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஹசீம் ஹமீது டக் அவுட் ஆகி வெளியேறியது அந்த அணிக்கு மோசமான வரலாற்று சாதனையை பெற்று தந்துள்ளது. அதன்படி ஹமீதின் டக் அவுட்டோடு சேர்த்து இந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 50 முறை டக் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement