தோனியை பற்றி இப்போது பேச எதுவுமில்லை. வெயிட் பண்ணுங்க – ரவி சாஸ்திரி

Ravi-Shastri

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சை ஆக மாறியது.

Dhoni

மேலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் அவரை இந்திய அணி நிர்வாகம் ஓய்வை அறிவிக்க கட்டாயப்படுத்தி வருகிறதோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. மேலும் தோனி எப்போது அணியில் இணைவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி தோனி குறித்து ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

தற்போது தோனி குறித்து யாரும் அதிக அளவில் யோசிக்க வேண்டாம் மற்றும் யாரும் அவரை பற்றி அதிகம் பேசவும் வேண்டாம் ஏனெனில் தோனி எப்போது விளையாடத் தொடங்குவார் என்பது அவருக்குத்தான் தெரியும். தோனி மீண்டும் விளையாட துவங்கினால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் ஐபிஎல் தொடர் வரை அனைவரும் வெயிட் பண்ணி தான் ஆக வேண்டும்.

Dhoni 1

ஏனெனில் ஐபிஎல் மிகப்பெரிய தொடர் அந்த தொடருக்கு பின்னரே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு நடைபெற உள்ளதால் தோனி ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை நாம் பார்த்தாக வேண்டும். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் அசத்தும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் ரவிசாஸ்திரி மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -