சர்வதேச போட்டியா இருந்தாலும் சரி, ப்ராக்டீஸ்ஸா இருந்தாலும் சரி.. பும்ரா இப்படித்தான் – ரவி சாஸ்திரி கருத்து

Ravi Shastri
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. பொதுவாகவே இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சார்களுடன் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 471 ரன்கள் குவித்தது.

பும்ராவின் முழு திறனை எப்போதும் வெளிப்படுத்த தவறியதில்லை : ரவி சாஸ்திரி

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரகளை குவித்துள்ளது. இதன் காரணமாக 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை விளையாட இருக்கிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே பலமாக இருக்கும் என்பதனால் இந்த மூன்றாம் நாள் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார். மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து பெரியளவு ஒத்துழைப்பு கிடைக்காத வேளையில் பும்ரா மட்டும் ஒருபுறம் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ராவின் பந்துவீச்சு குறித்து சில கருத்துக்களை முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து மண்ணில் கண்டிஷன் என்பது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இந்திய அணி அங்கு பந்துவீச தருமாறுகிறது. ஆனால் பும்ரா மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இப்படி பார்க்கையில் பும்ராவின் பணிச்சுமை இந்த தொடரில் மிகப்பெரியதாக இருக்கும் என்பதனால் எனக்கு கவலையாகவும் இருக்கிறது.

- Advertisement -

ஒவ்வொரு ஸ்பெல்லிலும் பும்ரா மட்டுமே விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் போல் தெரிகிறார். மற்ற பௌலர்களிடம் இருந்து அவருக்கு ஒத்துழைப்பு தற்போது கிடைக்கவில்லை. ஆனால் வரும் நாட்களில் மற்ற பந்துவீச்சாளர்கள் அதனை செய்வார்கள் என்று நினைக்கிறேன். பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் முழு பார்மில் இருக்கும்போது அவரால் பந்தை பேச வைக்க முடியும். அதை அவர் பலமுறை செய்தும் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். என்னை பொறுத்தவரை பும்ராவிடம் இருக்கும் ஒரு மிகச்சிறந்த குணம் யாதெனில் : எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன்களை பார்த்து அவர் தனது திட்டத்தை மாற்றுவார். அதேபோன்று சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி, வலைப் பயிற்சியாக இருந்தாலும் சரி, முழு திறனுடன் தனது சிறப்பான பந்துகளை மட்டுமே அவர் வீசுவார்.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரித் பும்ராவை சமாளிக்க இதை செஞ்சா போதும்.. இந்தியாவை ஈஸியா அடிக்கலாம்.. பென் டக்கெட் பேட்டி

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் வலைப்பயிற்சிக்கு வந்தால் கூட அவர்களுக்கு கடினமாக இருக்கும் பந்துகளையே அவர் வீசுவார். பயிற்சி என்றாலும் சரி, சர்வதேச போட்டி என்றாலும் சரி ஒரு அங்குலம் கூட அவரது முயற்சியை கைவிடாமல் முழு உத்வேகத்துடன் பந்து வீசுவார் அதை நேரிலேயே நான் பார்த்திருக்கிறேன் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement