ஜஸ்ப்ரித் பும்ராவை சமாளிக்க இதை செஞ்சா போதும்.. இந்தியாவை ஈஸியா அடிக்கலாம்.. பென் டக்கெட் பேட்டி

Ben Duckett
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, கேப்டன் 147, ரிஷப் பண்ட் 134 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் டாங் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 209/3 ரன்களை குவித்துள்ளது. அந்த அணிக்கு பென் டக்கெட் 62 ரன்களில் அவுட்டானாலும் ஓலி போப் சதத்தை அடித்து அசத்தினார். முன்னதாக இந்தப் போட்டியில் வழக்கம் போல ஜஸ்ப்ரித் பும்ரா மிகச் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்குப் போராடி வருகிறார்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா அடிக்க:

முதல் 3 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் தம்மை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தி வருகிறார். ஆனால் மறுபுறம் முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற பவுலர்கள் சுமாராக பவுலிங் செய்தனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை சமாளிக்க எதிர்புறம் பவுலிங் செய்யும் மற்ற இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவிக்க வேண்டும் என்று பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தாலே ஜஸ்ப்ரித் பும்ரா அழுத்தத்தை சந்திப்பார் என்று கூறியுள்ளார். அந்த அழுத்தத்தில் பும்ராவிடம் விக்கெட்டை கொடுக்காமல் விளையாடினாலே இந்தியாவை எளிதாக அடிக்க முடியும் என்று டக்கெட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பார்ட்னர்ஷிப் அமைப்பதற்காக நானும் போப்பும் நிறைய பேசிக்கொண்டோம். இவை அனைத்தும் சமநிலையுடன் நேர்மறையாக இருக்கும் வழியைக் கண்டறிவதைப் பற்றியதாகும்”

- Advertisement -

ஈஸியா இந்தியாவை அடிக்கலாம்:

“ஜஸ்ப்ரித் பும்ரா போன்றவர் பவுலிங் செய்யும் போது நீங்கள் எதிர்ப்புறம் ரன்கள் அடிப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். எதிர்ப்புறம் பவுலிங் செய்பவர்களை அழுத்தத்திற்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். பும்ராவுக்கு பின் சிராஜ் மிகவும் கடினமான ஸ்பெல்லை பவுலிங் செய்தார். அதில் சில முறை நான் தடுமாற்றமாக விளையாடினேன்”

இதையும் படிங்க: 600 ரன்களை மிஸ் பண்ண இந்தியா.. இனியாவது பிளெயிங் லெவனில் அந்த 2 பவுலரை சேர்க்கனும்.. கங்குலி அதிருப்தி

“ஆனால் அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டாகும். இங்கே எதுவும் உங்களுக்கு எளிதாக கிடைக்காது. எனவே பும்ரா ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நேர்மறையாக இருந்து மற்ற இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்வது எங்களுடைய இலக்காகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தை எப்படியாவது 450 ரன்களுக்குள் இந்தியா சுருட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement