கங்குலி, டிராவிட் இருக்கும்போது எனக்கு வேறென்ன வேணும் – ஐஸ் வைக்கும் ரவி சாஸ்திரி

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ-யின் தலைவராக கடந்த புதன்கிழமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றார். கங்குலி பிசிசிஐ 39 ஆவது தலைவர் அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பிசிசிஐக்கு தலைவராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும்.

Ganguly 1

- Advertisement -

இந்நிலையில் பதவியேற்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து கங்குலி அளித்த பேட்டியில் :பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியை தற்போது நீக்கத் தேவையில்லை ஏனென்றால் அவருடைய பதவி காலத்தில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்று கங்குலி தெரிவித்தார். இந்நிலையில் சௌரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராக பதவியேற்று இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில் ரவி சாஸ்திரி கூறியதாவது : கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருடைய பதவி ஏற்பு இந்திய கிரிக்கெட் அணி சரியான பாதைக்கு எடுத்துச் செல்லும் அவருடைய தலைமைப் பண்பு கண்டிப்பாக இந்திய அணியை முன்னேற்றம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட்டின் அனுபவம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய வீரரான அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தலைவராக உள்ளது இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஒரு நல்ல செய்தியாகும்.

Ganguly

மேலும் தேசிய கிரிக்கெட் அகடமியில் டிராவிட் உள்ளதாலும் பிசிசிஐயின் தலைமையில் கங்குலி உள்ளதாலும் இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரவி சாஸ்திரி இப்படி கூறுவதற்கு பின்னணி யாதெனில் கங்குலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் ஏற்கனவே ஆகாது என்பதால் தற்போது ரவி சாஸ்திரி தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் கங்குலிக்கு ஐஸ் வைக்கும் விதமாக ரவிசாஸ்திரி பேட்டி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement