ரோஹித் – கோலி இடையே இருந்த உரசலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி சாஸ்திரி – பாராட்டும் ரசிகர்கள்

Shastri
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே சிறு உரசல் இருப்பதாக சோசியல் மீடியா வளைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இருவரும் இந்திய அணிக்காக ஒரே வேளையில் விளையாடி வந்தாலும் இருவருக்கும் இடையே இடைவெளி இருப்பதாகவும் அவர்கள் இருவரும் முன்னர் போல இல்லை என்றும் அவர்களது ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பழையபடி இணைந்து நண்பர்களாக தற்பொழுது உள்ளனர் என்றும் அதற்கு மிகப்பெரிய அளவில் ரவிசாஸ்திரி உதவி செய்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Rohith

- Advertisement -

கடந்த நான்கு மாதங்களாக இந்திய அணி வீரர்கள் கொரோனா வைரஸ் காரணமாக தங்களை தற்காத்துக்கொள்ளும் வண்ணத்தில் பயோ பப்புள்ளில் நேரத்தை செலவிட்டு வந்தனர். இது கிரிக்கெட் வீரர்களுக்கு மிக கடினமாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட கால நேரம் ஒரு மிகப்பெரிய உதவி புரிந்திருக்கிறது. சமீபத்தில் கசிந்துள்ள செய்தியின் மூலம் , பயோ பப்புள்ளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது.

இவர்கள் இருவரும் பழையபடி இணைந்து சந்தோசமாக சிரித்து பேசியதற்கு ரவிசாஸ்திரி மிக முக்கிய காரணமாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து பல முக்கியமான முடிவுகளை எடுத்தனர், அது மிக தெளிவாக தெரிந்தது.

rohith

மேலும் விராட் கோலி ஒரு சில கட்டங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ள பெவிலியன் நோக்கி செல்லும் வேளையில் ரோகித் சர்மா கேப்டனாக நின்று அணியை வழி நடத்தினார். இது மிகவும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. மேலும் இருவரும் இணைந்து அணியின் குறை நிறைகளை மதிப்பீட்டு சரி செய்து வருவதாகவும் புரிந்தது. ரவி சாஸ்திரி தான் இவர்கள் இருவரையும் மீண்டும் சரியான பாதைக்கு திருப்பி மீண்டும் அவரகளை நண்பர்களாக்கியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Rohith-1

போட்டி நடப்பதற்கு முன்னரும், பின்னரும் இவர்கள் இருவரும் இணைந்து பல முடிவுகளை எடுத்துக்கொண்டு வருவதாகவும் செய்திகள் இது இந்திய அணிக்கு மிக மிக ஆரோக்கியமான விஷயம் என்று பல கிரிக்கெட் வல்லுநர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement