இந்த அறிவார்ந்த முடிவு எனக்கு புரியல.. சுந்தரை ஏன் அங்க களமிறக்கல? கம்பீரை சாடிய சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

கௌகாத்தியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடும் இந்திய அணி 3வது நாள் உணவு இடைவெளியில் 174/7 என திண்டாடி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்த போதிலும் கே.எல். ராகுல் 22 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். 3வது இடத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன் தடுமாறி 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

கம்பீரின் சோதனைகள்:

மிடில் ஆர்டரில் துருவ் ஜுரேல் 0, கேப்டன் ரிஷப் பண்ட் 7, ரவீந்திர ஜடேஜா 6, நித்திஷ் ரெட்டி 10 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக 8வது இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நங்கூரமாக விளையாடி இந்தியாவை காப்பாற்ற போராடுகிறார். அதைப் பார்த்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்தப் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கிய சுந்தரை இப்போட்டியில் குறைந்தது 4வது இடத்தில் விளையாட வைத்திருக்க வேண்டுமென்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதை விட்டுவிட்டு 3வது இடத்தில் விளையாடியவரை திடீரென 8வது இடத்தில் விளையாட வைக்கும் கௌதம் கம்பீரின் அறிவார்ந்த முடிவை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சாஸ்திரி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இது சரியான முடிவல்ல. அது எந்த அறிவார்ந்த பின்னணியும் உருவாக்கவில்லை”

- Advertisement -

சாஸ்திரி விமர்சனம்:

“இதனுடைய பின்னணியில் இருக்கும் சிந்தனை செயல்முறையை என்னால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இத்தொடரில் அவர்கள் செய்த சில தேர்வுகளின் செயல்முறைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக கொல்கத்தாவில் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்த நீங்கள் ஒரு ஸ்பின்னருக்கு ஒரு ஓவரை மட்டுமே வழங்கினார்கள்”

இதையும் படிங்க: சாய் சுதர்சன் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க இதை செய்தே ஆகனும் – முரளி கார்த்திக் கருத்து

“உண்மையில் அங்கே நீங்கள் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனை விளையாட வைத்திருக்க வேண்டும். அதே போல கொல்கத்தாவில் 3வது இடத்தில் விளையாடிய வாஷிங்டன் சுந்தரை இங்கே நீங்கள் எளிதாக 4வது இடத்தில் விளையாட வைத்திருக்கலாம். ஆனால் 3வது இடத்தில் விளையாடிய வரை நீங்கள் இங்கே 8வது இடத்தில் விளையாட வைக்கிறீர்கள். ஆனால் சுந்தர் 8வது இடத்தில் விளையாடுவதை விட வேறு இடத்தில் விளையாடுவதற்கு சிறந்தவர்” என்று கூறினார்.

Advertisement