சாய் சுதர்சன் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க இதை செய்தே ஆகனும் – முரளி கார்த்திக் கருத்து

Murali Karthik
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 700 ரன்களுக்கு மேல் குவித்ததோடு ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது நிலையான ஆட்டம் மற்றும் ரன் குவிக்கும் திறன் ஆகியவற்றை பார்த்த இந்திய அணியின் நிர்வாகமும் அவருக்கு இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பை வழங்கியது.

சாய் சுதர்சன் இந்திய அணியில் நீடிக்க இதை செய்ய வேண்டும் : முரளி கார்த்திக்

அந்த வகையில் 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அறிமுக வாய்ப்பினை பெற்றிருந்த சாய் சுதர்சன் அந்த தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். அதன்பிறகு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் தென்னாப்பிரிக்க தொடரின் முதல் ஆட்டத்தின் போது பிளேயிங் லெவனில் இருந்து சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தார். இப்படி சாய் சுதர்சன் சில வாய்ப்புகளை மட்டுமே பெற்ற நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

ஆனால் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான சாய் சுதர்சன் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன் தொடர்ந்து இடம் பிடிக்கவும், அவர் மூன்றாம் இடத்தில் தொடர்ச்சியாக விளையாட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான முரளி கார்த்திக் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் அவர் கூறியதாவது : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். அதேபோன்று இந்திய அணி இந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரன்களை வேகமாக குவிக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை சமன் செய்ய முடியும். சாய் சுதர்சனை பொருத்தவரை மிகத் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க : நிச்சயம் இதை செய்து நம்மால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியும் – சாய் சுதர்சன் நம்பிக்கை

ஆனால் சிறப்பான தரமான அணிகளுக்கு எதிராக அவர் அதிகளவு ரன்களை குவிக்க வேண்டும். அப்போது தான் அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம்பெற முடியும். தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி இதுபோன்ற ஆட்டங்களில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ரன்களை அடித்தால் நிச்சயம் அவர்மீது நிர்வாகத்திற்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் முரளி கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement