நிச்சயம் இதை செய்து நம்மால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியும் – சாய் சுதர்சன் நம்பிக்கை

Sai Sudharsan
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கனவே தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணியானது இந்த தொடரில் பூஜ்யத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. அதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதை செய்து நாங்கள் வெற்றி பெறுவோம் : சாய் சுதர்சன்

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களை குவித்துள்ள வேளையில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று 480 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என இந்திய அணியின் இளம் வீரரான சாய் சுதர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் இன்னும் மீதமுள்ள மூன்று நாட்களில் புத்துணர்ச்சியுடன் விளையாட தயாராக இருக்கிறோம். நிச்சயம் என்னால் இந்த போட்டியில் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். நிச்சயம் அதன்மூலம் அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்து செல்வேன் என்ற நம்பிக்கையையும் இருக்கிறது.

- Advertisement -

அதோடு இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்றும் தோன்றுவதாக சாய் சுதர்சன் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் இந்த முதல் இன்னிங்சில் ஒருநாள் அல்லது ஒன்றரை நாட்கள் தொடர்ந்து பேட்டிங் செய்யும் பட்சத்தில் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியும். அதேபோன்று மீதமுள்ள ஒன்றரை நாட்களில் தென்னாப்பிரிக்க அணியை தடுத்து நிறுத்தி வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக தோன்றுவதாக சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட வாஷிங்டன் சுந்தர்.. சாய் சுதர்சன் இஸ் பேக் – 3 ஆம் இடத்தில் கபடி ஆடும் இந்திய அணி

ஏற்கனவே மூன்றாம் இடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சாய் சுதர்சன் சிறப்பாக ஆடியிருந்தாலும் பெரிய ரன்களை குவிக்காமல் இருந்து வருவதால் அவர் மீது கலவையான விமர்சனங்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement