36க்கு ஆல் அவுட்டானப்போ இந்திய வீரர்களை பூஸ்ட்டாக்க.. ரவி சாஸ்திரி கரோக்கே பண்ணாரு.. அஸ்வின் பேட்டி

Aakash Chopra 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 2024 – 25 பார்டர் – காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

முன்னதாக கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் கேப்டன் விராட் கோலி தம்முடைய குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்பியதால் 4 – 0 (4) கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என மைக்கேல் வாகன், மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கணித்தனர்.

- Advertisement -

ரவி சாஸ்திரியின் கரோக்கே:

ஆனால் அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதைத் தொடர்ந்து 3வது போட்டியைப் போராடி டிரா செய்த இந்தியா 4வது போட்டியில் காபா மைதானத்தில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதனால் முக்கிய வீரர்கள் இல்லாமலேயே 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அத்தொடரில் 36க்கு ஆல் அவுட்டானதால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணியினருக்கு அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாட்டு பாடி புத்துணர்ச்சி கொடுத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி ரசிகர்கள் அறியாத பின்னணியை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “அந்த தோல்விக்குப்பின் நாங்கள் தொடரை வெல்வது பற்றி நினைக்கவே இல்லை”

- Advertisement -

சிறிய இலக்கு பெரிய வெற்றி:

“ஏனெனில் அணியின் மொத்த சூழ்நிலையும் தன்னம்பிக்கையும் சரிந்து போனது. ஆனால் அன்றைய நாள் மாலையில் ரவி பாய் இந்திய அணிக்காக பிரத்தியேக டின்னரை நடத்தினார். அந்த டின்னரில் அவர் பாட்டும் பாடினார். குறிப்பாக பிரபல பாடலின் வரிகள் இல்லாமல் கரோக்கே இசையை மட்டும் பின்பற்றி அவர் பாடத் துவங்கினார்”

இதையும் படிங்க: அந்த ட்ரக் ட்ரைவரை சட்டையை பிடிச்சு கெளதம் கம்பீர் அடிக்க போனாரு.. பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

“மெதுவாக மற்ற இந்திய வீரர்களும் அதைப் பின்பற்ற துவங்கினர். அந்த சமயத்தில் விராட் கோலி அணியிலிருந்து விலகினார். அப்போது நேர்மறையாக இருந்து மெல்போர்னுக்கு சென்று வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணமாகும். தொடரை வெல்வதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை. சிறிய இலக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு விளையாடினோம்” என்று கூறினார்.

Advertisement