அந்த ட்ரக் ட்ரைவரை சட்டையை பிடிச்சு கெளதம் கம்பீர் அடிக்க போனாரு.. பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2027 டிசம்பர் மாதம் வரை செயல்பட உள்ள அவர் இந்தியாவுக்கு குறைந்தது ஒரு உலகக் கோப்பையாவது வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்த்து காணப்படுகிறது. முன்னதாக 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா தோனி தலைமையில் வெல்வதற்கு கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றியவர்.

அதே போல ஐபிஎல் தொடரில் கேப்டன் மற்றும் ஆலோசகராக அவர் 3 சாம்பியன் பட்டங்களை வென்ற பெருமைக்குரியவர். அந்த வகையில் கௌதம் கம்பீர் திறமை மற்றும் அனுபவத்திற்கு பஞ்சம் இல்லாதவராகவே இருக்கிறார். இருப்பினும் அவருடைய கோபமான குணம் அவ்வப்போது விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் அவர் வாக்குவாதம் செய்ததை மறக்க முடியாது.

- Advertisement -

கோபமான கம்பீர்:

அதன் பின் 10 வருடங்கள் கழித்து 2023 சீசனில் லக்னோ அணியின் ஆலோசகராக கொஞ்சமும் மாறாத அவர் மீண்டும் விராட் கோலியுடன் மோதினார். இத்தனைக்கும் அவர்கள் இருவருமே டெல்லி மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடினர். அப்படி இருந்தும் ஜூனியரான விராட் கோலியிடம் மோதியது கௌதம் கம்பீரன் கேரியரின் மிகப்பெரிய சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒருமுறை டெல்லியில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசலால் கோபமடைந்த கௌதம் கம்பீர் இறங்கி சென்று டிரக் டிரைவரை அடிக்கச் சென்றதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா உள்ளூர் கிரிக்கெட்டில் கௌதம் கம்பீருடன் துவக்க வீரராக விளையாடியவர். எனவே ரசிகர்கள் அறியாத இந்த பின்னணியை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

திறமையும் அதீத கோபமும்:

“கௌதம் கம்பீர் ஒரு முறை டெல்லியில் டிரக் டிரைவருடன் சண்டையிட்டார். அவர் தன்னுடைய காரிலிருந்து இறங்கி ட்ரக்கில் ஏறி டிரைவரின் சட்டை காலரை பிடித்தார். ஏனெனில் அந்த டிரைவர் தவறான டர்ன் எடுத்து திட்டினார். அதை காரிலிருந்து பார்த்த நான் கௌதம் என்ன செய்கிறீர்கள்? என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தேன். கம்பீர் மிகவும் ஆர்வமான கடினமாக உழைக்கக்கூடிய நபர்”

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்பது சட்டமல்ல.. மும்பை அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

“மிகவும் சீரியசான அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அவர் எப்போதும் தன்னுடைய இதயத்தை ஜெர்ஸியில் அணிந்து விளையாடுவார். குணாதிசியத்தை பொறுத்த வரை அவர் மிகவும் குறுகியதாக இருக்கக்கூடும். ஆனால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன” என்று கூறினார். இதைத்தொடர்ந்து கௌதம் கம்பீர் அடுத்ததாக வங்கதேசம் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

Advertisement