இந்த ரூல்ஸ்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. பந்துவீச்சு பயிற்சியாளருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து – ரவி சாஸ்திரி வருத்தம்

Ravi-shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருப்பதன் காரணமாக தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு போதிய பயிற்சியின்மைய காரணம் என்ற பேச்சுகள் இருந்தன.

INDvsENG 1

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய அணியானது இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கவுண்டி அணிக்கு எதிராக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் கிடைத்த ஓய்வு நாட்களில் சுற்றுலா செல்ல அனுமதி கிடைத்ததால் வெளியே சென்று திரும்பினர்.

அப்படி வெளியே சென்று திரும்பிய சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அணி நிர்வாகத்தை சேர்ந்த சில ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

Bharath Arun

இந்நிலையில் தற்போது தனிமைப்படுத்துதல் நாட்களை முடித்தபின் மீண்டும் இந்திய அணியில் இணைந்த அவர் முதன்மை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உடன் இணைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ரவிசாஸ்திரி :

என்னுடைய வலது கையை மீண்டும் வந்து விட்டார். முன்பை விட பிட்டாகவும், வலிமையாகவும் இருக்கிறார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்த பின்பும் பத்து நாட்கள் தனிமைப் படுத்துவது என்பது கடுமையான விரக்தியை ஏற்படுத்துகிறது. இது போன்ற விதிமுறைகள் எரிச்சலைத் தருகிறது என்றும் இரு முறை நாங்கள் தடுப்பூசி போட்டுள்ளோம் அதனை நம்ப வேண்டும் என அவர் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement