மீண்டும் டாம் பாயாக மாறிய ரவி சாஸ்திரி. நியூசிலாந்து போயும் அமக்களமா ? – கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Ravi

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு உண்மையான சோதனையாக அமைய இருக்கும் பெரிய தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் அமைய உள்ளது.

ind vs nz 1

ஏனெனில் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான t20 இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது இந்த தொடருக்கான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று நியூசிலாந்து சென்றனர் வழக்கமாக வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கும் போது அங்கு செல்லும் இந்திய அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வெளியில் சென்று சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்திய வீரர்களையும் தாண்டி குறிப்பாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வெளிநாடுகளில் செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகும்.

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அங்கு சக பயிற்சியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் எந்த நாட்டிற்கு சென்றாலும் அரை டவுசர் மற்றும் பூப்போட்ட சட்டை அணிந்து வெளியே செல்லும் ரவிசாஸ்திரி இம்முறையும் அதே போன்று தனது பயிற்சியாளர்களுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நியூசிலாந்து சென்றும் டாம்பாயாக சுற்றித்திரியும் ரவி சாஸ்திரி தயவுசெய்து இந்த தொடரிலும் போட்டியின்போது தூங்க வேண்டும். அவர் தூங்கினால்தான் இந்திய அணி வெற்றி பெறுகிறது என்றும் இணையத்தில் கிண்டல் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.