இங்கிலாந்தில் பாத்திங்கல்ல.. அவர் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ரைசிங் ஸ்டார்.. ரவி சாஸ்திரி பாராட்டு

Ravi Shastri 2
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றார்கள். அதனால் இங்கிலாந்தில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் சிறப்பாக விளையாடி தொடரை சமன் செய்து அசத்தியது.

அத்தொடருக்கு முன்பாக வெளிநாடுகளில் சுப்மன் கில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்ற சில முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்தார்கள். ஆனால் தனது முதல் தொடரிலேயே 754 ரன்கள் குவித்த அவர் டான் பிராட்மேனுக்கு பின் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

- Advertisement -

இங்கிலாந்தில் பாத்திங்கல்ல:

குறிப்பாக 2வது போட்டியில் மட்டும் 430 ரன்கள் அடித்த கில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை அடுத்ததாக தலைமைத் தாங்குவதற்கு தாம் தகுதியானவன் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் அபாரமாக செயல்பட்ட சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த வளரும் நட்சத்திரம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சந்தேகமே வேண்டாம், அது சுப்மன் கில். அவர் இங்கிருந்து நீண்ட காலம் இந்திய அணியை சுற்றியிருக்கப் போகிறார். ஏனெனில் இங்கிலாந்தில் அவர் எம்மாதிரியான தொடரைக் கொண்டிருந்தார் என்பதை நாம் பார்த்தோம். தற்போது 25 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த வெளிப்பாடுகளால் இன்னும் சிறப்பாக முன்னேறுவார்”

- Advertisement -

ரைசிங் ஸ்டார் கில்:

“தற்போது இந்திய அணியில் இருக்கும் அவர் நீண்ட காலம் இருப்பார். மிகவும் அமைதியாக இருக்கும் அவருடைய பேட்டிங் ராஜரீதியாக இருக்கிறது. கண்களில் பார்ப்பதற்கு சரளமாக நன்றாக பேட்டிங் செய்யும் அவரிடம் நீண்ட நேரம் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமையும் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணி டிம் டேவிடை இப்படி எடுத்தது உண்மையிலேயே மிகச்சிறப்பான முடிவு – அஷ்வின் பாராட்டு

அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும் அவர் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் விராட், ரோஹித் ஆகியோரை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அவர்களை பிசிசிஐ கழற்றி விட்டால் சுப்மன் கில் 2027 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement