இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது கைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனாலும் வலியை தாங்கிக் கொண்டு இரண்டு இன்னிங்ஸ்சிலும் பேட்டிங் செய்திருந்தார். அதனால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 23-ஆம் தேதி துவங்க இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முழுநேர பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் விளையாடக்கூடாது : ரவி சாஸ்திரி
ஏனெனில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மீண்டும் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத பட்சத்தில் அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி : ரிஷப் பண்ட்டை முழுநேர பேட்ஸ்மேனாக டெஸ்ட் அணியில் சேர்க்கக்கூடாது என்கிற கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிஷப் பண்டை நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மேட்டுமே விளையாடும் பட்சத்தில் களத்தில் நின்று பீல்டிங்கும் செய்ய வேண்டி இருக்கும். அப்படி அவர் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அவருடைய காயம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.
அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் கிளவுஸ் அவரது விரல்களை பாதுகாக்கும். ஆனால் கிளவுஸ் இன்றி அவர் மைதானத்தில் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அது அவருடைய காயத்தை மேலும் மோசப்படுத்தும். எனவே அடுத்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம்.
அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் கூறுகையில் :
இதையும் படிங்க : இந்தியாவுக்காக முடியலன்னா போய்டுங்க.. ஏத்துக்க முடியாததை செய்யாதீங்க.. பும்ரா, கம்பீரை சாடிய வெங்சர்கார்
ரிஷப் பண்ட் மான்செஸ்டர் போட்டிக்கு முன்னதாக கடைசியாக விக்கெட் கீப்பிங் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அப்படி அந்த கடைசி சோதனையில் பிட்டாக இருந்தால் மட்டுமே அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த தெளிவு வரும் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



