50 சதங்கள் மட்டுமல்ல.. சச்சினோட அந்த பெரிய சாதனையையும் விராட் கோலி தான் காலி பண்ணுவாரு – ரவி சாஸ்திரி

Ravi-Shastri
Advertisement

மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து இநதியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நாளை மறுதினம் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்து சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் சாதனையை முறியடித்து மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் படைத்த இந்த சாதனை விராட் கோலியால் முறியடிக்கப்பட்டதில் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய உள்ள வேளையில் இந்த 50 சதங்கள் மட்டுமல்லாமல் சச்சினின் 100 சதங்கள் சாதனையை கண்டிப்பாக விராட் கோலி முறியடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராவது நெருங்குவார்கள் என்று நினைத்திருப்பீர்களா? ஆனால் தற்போது விராட் கோலி 80 சதங்களை அடித்து விட்டார். இன்னும் அவர் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கிறார். எனவே நிச்சயம் சச்சினின் 100 சதங்கள் சாதனையை அவர் முறியடிப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதுமட்டுமின்றி விராட் கோலி தற்போது இருக்கும் பார்மில் இன்னும் 10 போட்டிகளில் விளையாடினால் மேலும் 5 சதங்களை கூட அவரால் அடிக்க முடியும். ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு இறுதிவரை பேட்டிங் செய்யும் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்த வேர்லடுகப்ல ரோஹித்தோட பெயர் தான் எழுதி வச்சிருக்கு.. ஏன் தெரியுமா? – ஆகாஷ் சோப்ரா அதிரடி

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களையும் விளாசியுள்ள சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதம், டி20 1 சதம் என 80 சதங்களுடன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement