- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4வது டெஸ்டில் இந்தியா நிச்சயம் வெல்லும்.. 2 காரணம் இது தான்.. ரவி சாஸ்திரி உறுதியான நம்பிக்கை

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாள் பாக்ஸிங் டே ஸ்பெஷல் போட்டியாக நடைபெறும் அந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 3 போட்டிகளில் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இத்தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் 2வது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதே போல 3வது போட்டியிலும் திண்டாட்டமாக விளையாடிய இந்தியா மழையின் உதவியுடன் ட்ரா செய்தது.

- Advertisement -

இந்தியா வெல்லும்:

மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்த்து ஏனைய அனைத்து இந்திய வீரர்களும் தடுமாற்றமாகவே விளையாடி வருகிறார்கள். அதனால் 4வது போட்டியில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெர்த், அடிலெய்ட், காபா ஆகிய கடினமான மைதானங்களில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா போராடி 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

எனவே மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடைசியாக அம்மைதானத்தில் விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அது போக ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறுவதால் இந்தியா வெல்லும் என்று ரவி சாஸ்திரி உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சாஸ்திரி நம்பிக்கை:

“இந்தப் போட்டி பட்டாசாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன். அதில் தொடர் கடந்து வந்த விதத்தை வைத்து இந்தியாவை வெல்லும் என்று நினைக்கிறேன். பெர்த், அடிலெய்ட், பிரிஸ்பேன் ஆகிய 3 இடங்களில் சவாலை எதிர்கொண்டு 1 – 1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ள எந்த வெளிநாட்டு அணியும் இப்போட்டியை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும். 1 – 1 என்ற கணக்கில் செல்வது தான் பாக்ஸிங் டே போட்டிக்கான சிறந்த வழியாகும்”

இதையும் படிங்க: என்னோட முதல் போட்டியிலேயே அவரை எதிர்த்து விளையாட இருப்பது மகிழ்ச்சி – சாம் கோன்ஸ்டாஸ் வெளிப்படை

“அதே போல நீண்ட நாட்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் எளிதில் உடையக்கூடியதாக இருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களை இந்தியா தொடர்ந்து உடைக்கும். இளம் வீரர் கோன்ஸ்டஸ் புத்துணர்ச்சியுடன் அதிரடியாக விளையாடலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானது. அவருடைய டெக்னிக் இறுக்கப்படலாம். அவர் ஆஸ்திரேலிய அணியின் வருங்காலமாக இருக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -