பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்வதில் இவர் கில்லாடின்னு காமிச்சிட்டாரு – சி.எஸ்.கே வீரரை பாராட்டிய ரவிசாஸ்திரி

Shastri

ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே அடித்தனர்.

shahrukh 2

அதிகபட்சமாக ஷாருக்கான் 47 ரன்களையும், ரிச்சர்ட்சன் 15 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 36 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பலம் வாய்ந்த பஞ்சாப் அணி பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவர்ப்ளே ஓவர்களிலேயே பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் முடிவுக்கு வந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.

pooran

இந்நிலையில் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஒரு மெய்டன் ஓவர் வீசியது மட்டுமின்றி 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் கொலாப்ஸ் ஆனதால் இவரது பௌலிங்ற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தீபக் சாகரை பாராட்டியுள்ளார். அதில் “உண்மையை அவர் நிரூபித்துவிட்டார்” மீண்டும் ஒரு ஜெனியுயன் ஸ்விங் பவுலர் என்று நிரூபித்துவிட்டார். பந்தினை இருபுறமும் திருப்புவதில் இவர் வல்லவர். அவரது பவுலிங்கில் வெறியேஷன் இருந்தது பிரில்லியன்ட் என தனது ட்விட்டர் பக்கத்தில் தீபக் சாஹரை ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.