- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2021இல் மிஸ்ஸான வெற்றியை இந்தியா பிடிக்க.. டாப் 6இல் இந்த பேட்ஸ்மேன்கள் ஆடனும்.. சாஸ்திரி அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா 2021இல் தவற விட்ட வெற்றியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா விராட் கோலி தலைமையில் விளையாடியது.

அத்தொடரில் அபாரமாக விளையாடிய இந்தியா 4 போட்டிகளின் முடிவில் என்ற 2 – 1 கணக்கில் முன்னிலை பெற்றது. அப்போது லாக்டவுன் காரணமாக கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது. 2022இல் மீண்டும் நடைபெற்ற அப்போட்டியில் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடினார். உடல்நிலை சரியில்லாததால் விலகிய ரோகித்துக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக தலைமை தாங்கினார்.

- Advertisement -

டாப் 6 பேட்ஸ்மேன்கள்:

ஆனால் அவரது தலைமையில் இந்தியாவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அதன் காரணமாக 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணிக்கு இம்முறை கோலி, ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2021இல் தவற விட்ட வெற்றியை இம்முறை பெறுவதற்கு கேஎல் ராகுல் துவக்க வீரராக விளையாட வேண்டுமென்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்து தொடருக்கான டாப் 6 இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் துவக்க வீரராக விளையாட வேண்டும்”

- Advertisement -

ரவி சாஸ்திரி தேர்வு:

“அவருக்கு இது மிகப்பெரிய சுற்றுப்பயணம். தற்போதைய இந்திய அணியில் ராகுல் தான் நிறைய அனுபவமிக்க பேட்ஸ்மேன். கடந்த முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்தியாவுக்காக ஓப்பனிங்கில் விளையாடி சதத்தை அடித்த அவருக்கு தொடர் நன்றாக அமைந்தது. எனவே இம்முறையும் அவர் துவக்க வீரராக விளையாடுவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: பிரியாணி தின்னுட்டா போதுமா? 2018இல் ஷமியை கோபப்படுத்தி இந்தியாவை ஜெய்க்க வைத்தது பற்றி சாஸ்திரி

“அவர்களைத் தொடர்ந்து சாய் சுதர்சன். மிகவும் கவரும் வகையில் விளையாடும் அவருக்கு இந்த சுற்றுப்பயணம் நல்ல வாய்ப்பாகும். 4வது இடத்தில் கேப்டன் கில். 5வது இடத்தில் தற்போதைய ஃபார்மை அடிப்படையாக வைத்து கருண் நாயர் விளையாட வேண்டும். 6வது இடத்தில் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும். உள்ளூரில் கடினமாக உழைத்த கருண் நாயர் ஏராளமான ரன்கள் குவித்தார். “தேர்வுக்குழு கதவை தட்டாதீர்கள் உடையுங்கள்” என்று 2025 ஐபிஎல் தொடரில் நேரில் சந்தித்து நான் சொன்னதை அவர் செய்து காண்பித்துள்ளார்” எனக் கூறினார்.

- Advertisement -