பிரியாணி தின்னுட்டா போதுமா? 2018இல் ஷமியை கோபப்படுத்தி இந்தியாவை ஜெய்க்க வைத்தது பற்றி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. அவருடன் சேர்த்து ஃபிட்டாக இல்லையென்று சொல்லி முகமது ஷமியையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் மிரட்டலாக பௌலிங் செய்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது. 3வது போட்டியிலும் 241 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா கடைசி நாள் உணவு இடைவேளையில் 141/2 என்ற வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

பிரியாணி தின்னா போதுமா:

அப்போது பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த முகமது ஷமியை பார்த்து “நன்றாக சாப்பிட்டால் மட்டும் பசி தீர்ந்து விடுமா?” என்று சொல்லி கோபப்படுத்தியதாக அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதனால் கோபமடைந்த ஷமி சாப்பிடாமல் தொடர்ந்து விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது ஜோஹன்ஸ்பர்க் மைதானத்தில் கடைசி நாள். அந்தப் போட்டியில் போதுமான அளவுக்கு வெப்பம் இருந்தது. கடைசி நாளில் 240 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 100 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கையில் 8 விக்கெட்டுகள் இருந்த போது உணவு இடைவேளை வந்தது”

- Advertisement -

களத்தில் மிரட்டிய ஷமி:

“அந்த இடைவெளியில் ஷமியின் தட்டைப் பார்த்தேன். அதில் அவர் நிறைய பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்” என்று சொன்னார். அதே வீடியோவில் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தொடர்ந்து பேசியது பின்வருமாறு. “ஷமியை பார்த்து இந்த பிரியாணியுடன் உங்களுடைய பசி தீர்ந்து விடுமா? என்று சாஸ்திரி கேட்டார். ஷமி ஏதாவது பேச விரும்பினால் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்கச் சொல்லுங்கள் என்று சாஸ்திரி சொன்னார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தற்போதுள்ள இந்திய அணியால் நிச்சயம் இங்கிலாந்தில் இதை செய்துகாட்ட முடியும் – ஷர்துல் தாகூர் நம்பிக்கை

இறுதியாக சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “அதனால் பிரியாணியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு ஷமி கோபமாக சென்றார். போட்டி முடிந்த பின் பரத் அருணிடம் சென்ற ஷமி இப்போது போதுமான அளவுக்கு சாப்பிட பிரியாணி கொண்டு வாருங்கள் என்று சொன்னார். என்னை எப்போதும் கோபமாக வைத்திருப்பது நன்றாக இருக்கும் என்றும் ஷமி கூறினார். ஷமி அப்படிப்பட்டவர்” என்று சொல்லி முடித்த சாஸ்திரி பழைய நினைவை பகிர்ந்தார்.

Advertisement