பழி வாங்க நினைக்கும் ஆஸியை இதை செஞ்சா இம்முறையும் இந்தியா தோற்கடிக்கலாம்.. ரவி சாஸ்திரி பேட்டி

Ravi Shastri 6
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோத உள்ள 2024 பார்டர் – கவாஸ்கர் கோப்பை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விராட் கோலி தலைமையில் 2018/19 கோப்பையை வென்ற இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது. அதே போல 2020/19 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் அங்கிருந்து அபாரமாக விளையாடிய இந்தியா ரஹானே தலைமையில் 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடரை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சாஸ்திரி கணிப்பு:
ஆனால் கடந்த 2 தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடியாக இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இந்நிலையில் கடந்த தொடரை விட இம்முறை ஷமி, பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்கள் ஃபிட்டாக இருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

எனவே ரோஹித், விராட் போன்ற பேட்ஸ்மேன்கள் அசத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெறலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை போட்டி மிகுந்ததாக இருக்கும். இந்தியா கடந்த 2 தொடரில் ஆஸ்திரேலியாவை 2 முறை தோற்கடித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு தசாப்தமாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லவில்லை”

- Advertisement -

“அதனாலேயே இந்த டாப் 2 அணிகள் மோதும் தொடருக்கு அனைவரும் காத்திருக்கின்றனர். மிகவும் கடினமாக இருக்கப்போகும் அத்தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களின் பவுலர்கள் ஃபிட்டாக இருக்கின்றனர். எனவே அவர்கள் நன்றாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவை மீண்டும் தோற்கடிக்க முடியும். மறுபுறம் ஆஸ்திரேலியா பழி தீர்க்க காத்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: 2011க்குப்பின் சாதிக்க.. முன்னாள் இந்திய வீரரை பயிற்சியாளராக நியமித்த கென்யா.. ஆப்கானிஸ்தான் போல அசத்துமா?

“மிகவும் தாகமாக இருக்கும் அவர்கள் இந்தியர்களின் தொண்டையில் செல்ல பார்க்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் 2 முறை சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட்டனர். நேதன் லயன் இருக்கும் அவர்களுடைய பவுலிங் அட்டாக் வரலாற்றில் சிறந்த ஒன்றாகும். எனவே இம்முறை அவர்கள் 20 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றியை தேடுவார்கள். அந்தத் தொடருக்காக யாராலும் காத்திருக்க முடியாது. இம்முறை இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement