
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணியை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்த தொடர் அமைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்த தொடரின் மீது அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்ப இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சவால் வாய்ந்த தொடராக பார்க்கப்படும் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தனக்கு பிடித்தமான இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்துள்ளார். அப்படி அவர் அறிவித்துள்ள அந்த அணியில் துவக்க வீரர்களாக : ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சனையும், விராட் கோலியின் நான்காவது இடத்தில் சுப்மன் கில்லையம் அவர் தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்தில் கருண் நாயரையும், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டையும் தேர்வு செய்துள்ளார்.
அதுதவிர்த்து ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜாவையும், மூன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரவி சாஸ்திரி தேர்வுசெய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : நீங்க சொல்றத ஏத்துக்க முடியாது.. பி.சி.சி.ஐ-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி – என்ன நடந்தது?
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) கருண் நாயர், 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா.