அவருக்கு சச்சின் மாதிரி ஃபேர்வெல் மேட்ச்’லாம் பிடிக்காது, இளம் வீரரின் வாய்ப்பையும் பறிக்க மாட்டாரு – சாஸ்திரி பாராட்டு

Shastri
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் ஃபைனலில் தோற்ற இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லப் போராட உள்ளது. அந்த போட்டியில் ரிஷப் பண்ட் காயத்தால் விளையாட மாட்டார் என்ற நிலைமையில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோரில் விளையாடப் போவது யார் என்ற விவாதம் கடந்த ஒரு மாதமாகவே நிலவுகிறது.

Rohit-and-KL-Rahul

அதில் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அறிமுகமாகி சுழலுக்கு சாதகமான மைதானங்களிலேயே விக்கெட் கீப்பிங் செய்ய தடுமாறிய பரத் பேட்டிங்கிலும் பெரிய ரன்களை எடுக்காமல் சுமாராகவே செயல்பட்டார். அப்படி இந்திய ஆடுகளிலேயே தடுமாறிய அவர் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்தில் நிச்சயம் தடுமாறுவார் என்பதால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

சாஸ்திரி அதிரடி:
ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் சுழலுக்கு சாதகமற்ற மைதானங்களில் விக்கெட் கீப்பிங் செய்வது கடினமில்லை என்பதுன் ஏற்கனவே 2018, 2021 ஆகிய வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் ராகுல் தொடக்க வீரராக விளையாடி சதமடித்த அனுபவத்தையும் கொண்டுள்ளார். இந்நிலையில் 2010இல் கேப்டனாக இந்தியாவை முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேற்றிய பெருமையைக் கொண்ட தோனி இங்கிலாந்தில் விக்கெட் கீப்பராக சதமடிக்கவில்லை என்றாலும் பலமுறை 70, 90 போன்ற ரன்களை எடுத்து வெற்றிக்கு போராடியுள்ளார்.

Dhoni virat kohli

அப்படி அனுபவம் நிறைந்த விக்கெட் கீப்பரான அவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் 41 வயதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் ஒருவேளை பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் கேட்டால் ஓய்விலிருந்து வெளிவந்து இந்த ஃபைனலில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவாரா என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

- Advertisement -

அதற்கு தோனி ஒருமுறை முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார் என்று தெரிவித்த சாஸ்திரி இளம் வீரர்களுக்கான வாய்ப்பையும் பறிக்க மாட்டார் என்று பதிலளித்துள்ளார். அத்துடன் 2014இல் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்திருந்ததால் சச்சின் போல அவர் நினைத்திருந்தால் ஃபேர்வெல் போட்டியுடன் விடைபெற்றிருக்க முடியும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

MS Dhoni Suresh Raina

இருப்பினும் அதையெல்லாம் விரும்பாத காரணத்தால் தோனி தமது தலைமையில் தோல்வி பாதையில் நடந்த இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப விராட் கோலி சரியானவர் என்பதை உணர்ந்து உடனடியாக 2014இல் ஓய்வு பெற்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆம் நிச்சயமாக. கடந்த ஒரு வருடமாக எவ்விதமான முதல் தர கிரிக்கெட்டிலும் விளையாடாமலேயே இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவில் இருக்கும் பல இளம் விக்கெட் கீப்பர்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பவராகவே திகழ்ந்து வருகிறார். இருப்பினும் ஒருமுறை எம்எஸ் தோனி மனதளவில் ஒரு முடிவெடுத்து விட்டால் பின்னர் அதில் மாற்றம் செய்ய மாட்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எளிதாக இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடியிருக்க முடியும்”.

Ravi-Shastri

இதையும் படிங்க:வரலாற்றில் அரிதாக முதல் முறையாக கேப்டன் புஜாரா தலைமையில் விளையாடும் ஸ்மித் – இருவரும் ஜோடியாக கொடுத்த பேட்டி இதோ

“ஏனெனில் அந்த சமயத்தில் அவர் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தினார். அதனால் அவரால் தொடர்ந்து விளையாடி தன்னுடைய 100வது போட்டியை பெரிய மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்னிலையில் நடந்து ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. மாறாக அந்த இடத்திற்கு வந்த புதிய வீரர் அங்கேயே விளையாடட்டும் என்று அவர் தனது கைகளை உயர்த்தி வெளியே சென்றார்” என்று கூறினார்.

Advertisement