இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை கழற்றி விடுவதற்கு தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் அவர்கள் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் விடை பெற்றனர். அடுத்ததாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் தடுமாற்றமாக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.
அப்போது இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுப்பதற்காக அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாரானார்கள். அதற்கு முன் தேர்வுக்குழு அவர்களை கழற்றி விடுவதற்கு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது. அதற்கு முன்பாக அவர்களாகவே இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஓய்வு பெறுவனர். இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா 12 வருடங்கள் கழித்து வெல்ல அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள்.
அவசரப்பட்டு அனுப்பாதீங்க:
அடுத்ததாக 2027 உலகக் கோப்பையில் விளையாட அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் அப்போது 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே ரோஹித் சர்மாவை ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ள விராட், ரோஹித்தை ஒருநாள் கிரிக்கெட்டிலாவது அவசரப்பட்டு ஓய்வு பெற வைத்து விடாதீர்கள் என்று ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் ஓரிரு வருடங்கள் மட்டும் பங்காற்றவில்லை. விராட் ஒன்றரை தசாபத்திற்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டுக்கு பங்காற்றியுள்ளார் என்பது பெரியது”
சாஸ்திரி கருத்து:
“அதை மக்கள் மறக்கக்கூடாது. அவர்கள் சில சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பது ஸ்பெஷலானது. இன்று, நாளை அல்லது எப்போது ஓய்வு பெற்றாலும் அவர்களுடைய மரபு (லீகசி) அப்படியே இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பின் வரும் எந்த வெளிநாட்டு வீரராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் கால் வைத்த 2 நாட்களில் அசத்துவது கடினம். குறிப்பாக பெர்த் போன்ற பவுன்ஸ் நிறைந்த சவாலான சூழ்நிலையில் தரமான பவுலர்களுக்கு எதிராக அசத்துவது எளிதல்ல”
இதையும் படிங்க: 50 ஓவர்களும் ஸ்பின்.. வங்கதேசத்தில் போட்டுத் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்.. 2 அரிய உலக சாதனை
“இத்தொடரில் அவர்கள் அசத்துவார்களா என்பதை நேரமே சொல்லும். அவர்களை மதிப்பிடுவதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் உங்களிடம் எந்தளவு மகிழ்ச்சியுடன் விளையாட முடிகிறது, வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வம் இருக்கிறதா என்பவை முக்கியம். அந்தக் கட்டங்களை நிரப்பினால் அவர்களுக்கு நீங்கள் நேரத்தைக் கொடுக்கலாம். ஏனெனில் கிளாஸ், அனுபவம் ஆகியவற்றைக் கொண்டுள்ள அவர்களுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க கொஞ்சம் நேரம் பிடிக்கும் என்று கூறினார்.



