- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதான் விராட் கோலி ரூட்.. ஆஸியை பாத்து பயப்படாம நெருப்புடன் மோதுங்க.. இந்தியாவுக்கு சாஸ்திரி அட்வைஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

முன்னதாக அத்தொடரின் இரண்டாவது போட்டியில் டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய முகமது சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபமாக அனுப்பினார். அதற்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டே கோபத்துடன் திரும்பினார். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த இருவருக்கும் ஐசிசி தண்டனையாக 20% சம்பளத்தை அறிவித்தது.

- Advertisement -

சாஸ்திரி அட்வைஸ்:

முன்னதாக அந்தப் போட்டி முடிவதற்குள்ளேயே 3வது நாள் பேட்டிங் செய்த முகமது சிராஜ் தனது அருகில் நின்ற டிராவிஸ் ஹெட்டிடம் தாமாக சென்று சில சமாதான வார்த்தைகளை பேசினார். இறுதியில் அந்த இருவரும் கைகொடுத்து சமாதானமாக சென்றார்கள். இந்நிலையில் டிராவிஸ் ஹெட்டிடம் அவ்வாறு சிராஜ் நடந்து கொண்டதில் எந்த தவறுமில்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இல்லையேல் ஆஸ்திரேலியர்கள் நம் மீது ஏறி சென்று விடுவார்கள் என்ற வகையில் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். எனவே ஆஸ்திரேலியர்களுக்கு பயப்படாமல் அடுத்த போட்டிகளிலும் அது போன்ற தருணங்கள் வந்தால் இந்திய அணியினர் நெருப்புடன் நெருப்பாக மோத வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி கோட் ஸ்போர்ட்ஸ் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

பின் வாங்காதீங்க:

“சிராஜ் – ஹெட் ஆகியோர் முதிர்ச்சியான வீரர்கள். அதனால் அவர்கள் அதை சமாளித்து முடித்திருப்பார்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் நான் அதைத் தவிர்த்து வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டேன். அதனாலேயே சிராஜ் கொஞ்சம் கோபத்தை விட்டார். அது வேகப்பந்து வீச்சாளர்களின் குணம். அது அப்படி இருப்பதையே நீங்கள் விரும்புவீர்கள்”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் இங்கிலாந்து மாதிரி அதை தைரியமா செஞ்சாரு.. இதான் எங்களோட புதிய ஸ்டைல்.. ஹரி ப்ரூக்

“நான் விளையாடிய காலங்களில் எதிரணியினர் எவ்வளவு நன்றாக கொடுக்கிறார்களோ அவ்வளவு நாமும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே எனது தத்துவம். ஆஸ்திரேலியாவில் பயிற்சியை கொடுக்கும் போது இந்திய வீரர்களிடம் இதைத்தான் கூறினேன். ஒரு போதும் ஒரு கால் கூட பின் வாங்க வேண்டாம். நெருப்புடன் நெருப்பாக மோத வேண்டும். அதுவே பின்னர் இந்திய அணியின் தத்துவமாகவும் மாறியது. விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய இந்திய வீரர்கள் அனைவருமே ஆஸ்திரேலியர்களுக்கு திருப்பி கொடுக்க தயாராக இருந்தார்கள்” என்று கூறினார்.

- Advertisement -