ரிஷப் பண்ட் இங்கிலாந்து மாதிரி அதை தைரியமா செஞ்சாரு.. இதான் எங்களோட புதிய ஸ்டைல்.. ஹரி ப்ரூக்

Harry Brook
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சுவாரசியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2வது போட்டியில் அவர் வெளிப்படுத்தி ஆட்டம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக 2வது இன்னிங்சில் விராட் கோலியின் விக்கெட்டை இழந்த இந்தியா 66-3 என தடுமாறியது.

அப்போது களமிறங்கிய அவர் பேட்டிங்கை மெதுவாக துவக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்காட் போலண்ட் வீசிய முதல் பந்திலேயே இறங்கி வந்த அவர் மிட் ஆஃப் திசையில் அதிரடியான பவுண்டரி பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதே போட்டியில் ஏபி டீ வில்லியர்ஸ் போல விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் படுத்துக்கொண்டே அவர் அடித்த சில பவுண்டரிகள் ஆச்சிரியத்தைக் கொடுத்தது.

- Advertisement -

தைரியமான ரிஷப் பண்ட்:

இருப்பினும் அப்படி அட்டகாசமாக விளையாடிய அவர் இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் ஏமாற்றத்தையே கொடுத்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட் போல முதல் பந்திலேயே பவுண்டரியுடன் டெஸ்ட் போட்டியை துவக்க தைரியம் வேண்டும் என்று இங்கிலாந்து இளம் வீரர் ஹரி ப்ரூக் தெரிவித்துள்ளார். அதுவே இங்கிலாந்து அணியின் ஸ்டைலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை காப்பாற்றாமல் அதிரடியாக விளையாடுவதே தாம், ரிஷப் பண்ட் போன்ற இந்த காலத்து பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை என்றும் அவர் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 123, 55 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

இங்கிலாந்தின் ஸ்டைல்:

இதுவரை 23 போட்டியிலேயே 8 சதங்கள் அடித்துள்ள ப்ரூக் இங்கிலாந்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் கடந்த இரவு பிட்ச்சில் இறங்கி வந்து முதல் பந்தை அடித்ததை நீங்கள் பார்த்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் முதல் பந்திலேயே அது போன்ற துவக்கத்தை நீங்கள் பெறுவதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்”

இதையும் படிங்க: இவரை பாத்தா 13 வயசு மாதிரி தெரியல.. வைபவ் சூரியவன்ஷி மீது சந்தேகத்தை கிளப்பிய – ஜுனைத் கான்

“அதையே கடந்த சில வருடங்களாக நாங்கள் நன்றாக செய்து வருகிறோம். நாங்கள் களத்திற்கு ரன்கள் அடிப்பதற்காக செல்கிறோம். விக்கெட்டை காப்பாற்றுவதற்காக செல்வதில்லை என்பதை எப்போதும் சொல்லி வருகிறோம்” என்று கூறினார். ஆனால் அப்படி அதிரடியாக விளையாட முயற்சித்த இங்கிலாந்தை கடந்த மார்ச் மாதம் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement