இவரை பாத்தா 13 வயசு மாதிரி தெரியல.. வைபவ் சூரியவன்ஷி மீது சந்தேகத்தை கிளப்பிய – ஜுனைத் கான்

Vaibhav
- Advertisement -

சவுதி அரேபியாவில் கடந்த மாதம் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தின் போது 13 வயதான வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல் அணியானது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இடதுகை துவக்க வீரரான இவர் 19 வயத்துக்குட்பட்டோர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

அவரோட வயசு பத்தி சந்தேகம் இருக்கு :

அந்த தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரின் பேட்டிங் திறமையை கண்டறிந்த ஒரு சில அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர் மீது அதிகப்படியாக நம்பிக்கை வைத்து பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முடிந்த ஒரு போட்டியின் போது ஐந்து பவுண்டரி, ஐந்து சிக்ஸர் என குறைந்த பந்துகளிலேயே 67 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த சிக்சர்கள் எல்லாம் தொலைதூரம் சென்று மிகப்பெரிய சிக்ஸர்களாக மாறின.

இந்நிலையில் 13 வயது சிறுவனால் எப்படி இவ்வளவு தூரம் சிக்சர் அடிக்க முடியும்? என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஜுனைத் கான் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : வைபவ் சூரியவன்ஷிக்கு 15 வயது இருக்கும் என்று பெரும்பாலோர் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் என்னை பொருத்தவரை 13 வயது உடைய ஒரு வீரர் எப்படி இவ்வளவு தூரம் சிக்சர் அடிக்க முடியும்? நிச்சயம் அவருக்கு இவ்வளவு பலம் இருக்காது. இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே வயது குறித்த சர்ச்சைக்கு அவரது தந்தை பதிலளிக்கையில் :

இதையும் படிங்க : பாய்ண்ட்டை பிடிச்சுட்டாரு.. பாண்டிங், வாக் மாதிரி பயிற்சி எடுக்கும் கோலியின் கம்பேக் உறுதி.. ஹர்பஜன் பேட்டி

ஏற்கனவே பிசிசிஐ சோதனைக்கு என் மகன் சென்று விட்டார் என்றும் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மீண்டும் அவருக்கு வயது குறித்த சோதனை நடத்தப்பட்டாலும் அதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement