- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நேத்து பவுன்சர்ல 24 மணிநேரம் லேட்.. இன்று 69 ஓவர்ஸ் சுந்தர் வெய்டிங்.. கில் கேப்டன்ஷிப்பை சாடிய சாஸ்திரி

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்ற வருகின்றது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து 3வது நாளின் முடிவில் 544/7 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94, ஓலி போப் 71, ஜோ ரூட் 150, கேப்டன் ஸ்டோக்ஸ் 77* ரன்கள் எடுத்து இந்தியாவை பந்தாடினர். தற்சமயத்தில் இந்தியாவை விட இங்கிலாந்து 186 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

மோசமான கேப்டன்ஷிப்:

அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமாகியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைக்கு சுப்மன் கில் கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்படிப்பட்ட அவரை இப்போட்டியில் கில் 69 ஓவர்கள் வரை பயன்படுத்தவில்லை.

அதன் பின் வாய்ப்பை பெற்ற 13வது பந்தில் ஓலி போப்பை காலி செய்த சுந்தர் அதிரடியாக விளையாடக்கூடிய ஹாரி ப்ரூக்கையும் அவுட்டானார். இந்நிலையில் இந்தப் போட்டியில் சுப்மன் கில் கேப்டன்ஷிப் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்தது பின்வருமாறு. “சுந்தர் கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தவர். அப்படிப்பட்டவரை நீங்கள் 67, 69வது ஓவருக்கு பின் பவுலிங் செய்ய கொண்டு வந்தீர்கள்”

- Advertisement -

சாஸ்திரி விமர்சனம்:

“உங்களுடைய இந்த முடிவு அந்த வீரரை என்ன நினைக்க வைக்கும்? 4 விக்கெட்டுகள் எடுத்த நான் இப்போட்டியில் முதல் 30 – 35 ஓவருக்குள் பவுலிங் செய்ய வேண்டும் என்று சுந்தர் நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால் அவரை நீங்கள் 69 ஓவருக்கு பின் பயன்படுத்தினீர்கள். அப்போதும் அவர் உங்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார்”

இதையும் படிங்க: நிச்சயம் ஜோ ரூட்டால் ஈஸியா சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியும் – ரிக்கி பாண்டிங் கருத்து

“அதே போல நேற்று சிராஜ் புதிய பந்தில் பவுலிங் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரை விட்டுவிட்டு தனது அறிமுகப் போட்டியில் விளையாடும் கம்போஜிடம் நீங்கள் புதிய பந்தை கொடுத்தீர்கள். அது இங்கிலாந்து அணியிடமிருந்து அழுத்தத்தை அகற்றியது. அடுத்ததாக பவுன்சர் திட்டத்தை 24 மணி நேரம் தாமதமாக செயல்படுத்தினீர்கள். உண்மையில் நீங்கள் அதை நேற்று ஆரம்பத்திலேயே பயன்படுத்தி இங்கிலாந்தை அட்டாக் செய்து பார்த்திருக்க வேண்டும். இப்படி தந்திரபோய ரீதியாக நிறைய அம்சங்கள் காணப்படவில்லை” என்று கூறினார்.

- Advertisement -