சுப்மன் கில்லின் அந்த குறையை சொல்றவங்க உங்க ரெக்கார்டை பாருங்க.. சேத்து அடிப்பாரு.. சாஸ்திரி பதிலடி

Ravi Shastri 5
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் அந்த 5 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய இந்திய அணியின் கேப்டனாக செயல்படப் போவது யார்? என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுப்மன் கில் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. சமீப வருடங்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பேட்டிங் துறையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படுகிறார். எனவே அடிக்கடி காயமடையக்கூடிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை புதிய கேப்டனாக பரிந்துரை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

உங்களை பாருங்க:

ஆனால் சுப்மன் கில் சொந்த மண்ணுக்கு வெளியே 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த 15 போட்டிகளில் அவர் 716 ரன்களை 27.53 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். எனவே முதலில் சுப்மன் கில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவலில் இருப்பதற்கே முக்கியமற்ற வீரர் என்று சமீபத்தில் ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார்.

அதே போல நிறைய ரசிகர்களும் சுப்மன் கில் கேப்டனாவதை விரும்பவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் வெளிநாடுகளில் சுப்மன் கில் அசத்தவில்லை என்று சொல்பவர்கள் முதலில் அவர்களுடைய ரெக்கார்டை பார்க்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் போன்ற விமர்சகர்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சாஸ்திரி பதிலடி:

“சுப்மன் கில் மிகவும் சுவாரசியமானவர். அமைதி, பொறுமை போன்ற அனைத்து பண்புகளையும் கொண்டவர். வெளிநாடுகளில் அவர் ரன்கள் அடிக்கவில்லை என்பதை மட்டுமே நீங்கள் பேசுவீர்கள். எப்போதும் அவர் வெளிநாட்டில் ரன்கள் அடிக்கவில்லை என்ற விவாதம் வரும். அது போல விமர்சிப்பவர்கள் முதலில் தங்களுடைய ரெக்கார்டை பார்க்க வேண்டும் என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: ஆனந்தக் கண்ணீரில் நனைந்த அம்மா, அப்பா.. திறப்பு விழாவில் ரோஹித் நெகிழ்ச்சியுடன் பேசியது என்ன?

“வெளிநாட்டு மண்ணில் நீங்கள் எவ்வளவு சாதித்துள்ளீர்கள்? முதலில் அவரை வெளிநாட்டில் விளையாடி ரன்கள் அடிக்க விடுங்கள். அவர் கிளாஸ் பிளேயர். இம்முறை அவர் சிறப்பாக அசத்துவார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதற்கு முன்பு அடிக்காத ரன்களையும் சேர்த்து அவர் இம்முறை அடிப்பார்” எனக் கூறினார்.

Advertisement