1980ஸ் வெ.இ மாதிரி இந்தியா முன்னேறிருக்கு.. அதுக்கு அந்த வெற்றிகள் தான் சாட்சி.. ரவி சாஸ்திரி பாராட்டு

Ravi Shastri 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 1990களில் பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கர் அடித்தால் தான் வெல்லும் என்ற நிலைமையில் இருந்தது. அதே போல தோனி கேப்டனாக இருந்தது வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற இந்தியா திணறியது. ஆனால் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகப்படியான ஆதரவு கொடுத்து 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள் என்ற பிளேயிங் லெவனை உருவாக்கினார்.

அதைப் பின்பற்றி வெளிநாடுகளில் அசத்திய இந்தியா விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் 2018 – 19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து 2020 – 21 தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மாதிரி:

அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்தது. இந்நிலையில் 1980களில் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியை போல தற்போது இந்திய அணி முன்னேறியுள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அதற்கு சவாலான ஆஸ்திரேலியாவில் 2018 – 19, 2020 – 21 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றது சான்று என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மக்கள் உலகக் கோப்பைகளை பற்றி பேசுவார்கள். ஆனால் உலகக் கிரிக்கெட்டை பின்பற்றும் மக்களிடம் சென்று நீங்கள் கேட்கும் போது அவர்கள் ஆஸ்திரேலியாவில் நாங்கள் வென்ற 2 டெஸ்ட் தொடர்களை பற்றி எப்போதும் சிந்திப்பார்கள்”

- Advertisement -

வரலாற்று வெற்றிகள்:

“இந்த உலகில் எத்தனை அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அடுத்தடுத்த தொடர்களில் அவர்களை வீழ்த்தியுள்ளனர்? அது 1980களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததை போன்றது. வேறு எந்த அணியும் அதை செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அங்கே அடுத்தடுத்த தொடர்களை வெல்லும் போது நீங்கள் மக்களின் கற்பனையை பிடிக்கிறீர்கள்”

இதையும் படிங்க: ஆலன் டொனால்ட் மாதிரி.. மயங் யாதவ் லக்னோவின் ரோல்ஸ் ராய்ஸ்ன்னு அவர் பாராட்டுனாரு.. ஜான்டி ரோட்ஸ்

“ஆஸ்திரேலிய தொடர்கள் மிகவும் கடினமானது என்பது ஒவ்வொரு கிரிக்கெட்டருக்கும் தெரியும். அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு ஸ்பெஷல் முயற்சிகள் தேவை. அது 40 ஓவரில் நடந்து விடாது. அது 20 நாட்கள் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் தான் நடக்கும். 2018 – 19இல் நாங்கள் 19 நாட்கள் விளையாடினோம். ஆஸ்திரேலியாவில் நிறைய அணிகளால் 20 நாட்கள் விளையாட முடியாது. 2020இல் நாங்கள் 3 நாட்களில் நாக் அவுட் செய்யப்பட்டும் கடைசியில் வென்றோம்” என்று கூறினார்.

Advertisement