IND vs AUS : அதனால் தான் தோனி சிறந்தவர், நேரலையில் டிகே தவறை சுட்டிக்காட்டிய ஜாம்பவான் – நடந்தது என்ன

MS Dhoni vs DInesh Karthik
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா சொந்த ரசிகர்களுக்கு முன் கோப்பையை வெல்ல கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் மோசமான பந்து வீச்சு காரணமாக வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya

அத்துடன் அப்போட்டியில் உமேஷ் யாதவ் வீசிய 12வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் கொடுத்த கேட்ச்சை சரியாக பிடித்தும் அதை சத்தமாக நடுவரிடம் அப்பீல் செய்யாத தினேஷ் கார்த்திக் மீது கேப்டன் ரோகித் சர்மா கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியது நிறைய விவாதங்களை எழுப்பியது. மேலும் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள அவரது திறமை மீது நம்பாத ரோகித் சர்மா அடங்கிய அணி நிர்வாகம் அவருக்கு முன்பாக அக்சர் பட்டேலை பேட்டிங் செய்ய அனுப்பியதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

- Advertisement -

தோனியாக முடியாது:
முன்னதாக கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு அறிமுகமான தினேஷ் கார்த்திக் அதே காலகட்டத்தில் அறிமுகமாகி அவரைவிட அதிரடியான பேட்டிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங், அபாரமான பினிஷிங், 3 உலகக் கோப்பைகளை வென்ற கேப்டன், விராட் கோலி – ரோகித் சர்மா போன்ற அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய தலைவன் போன்ற பல பரிணாமங்களை கொண்ட எம்எஸ் தோனி இருந்ததால் பெரும்பாலும் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறவில்லை. மேலும் அதே காலகட்டத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதும் நிதர்சனமாகும்.

Dinesh Karthik MS Dhoni

இருப்பினும் நிறைய ரசிகர்கள் தோனியால் தினேஷ் கார்த்திக் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறுவதை இப்போதும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 5வது ஓவரின் ஒரு பந்தை வீசிய யுஸ்வென்ற சஹால் லெக் ஸ்டம்ப் நோக்கி வீசினார். அதை லெக் சைடு திசையில் அடிக்க முயற்சித்த ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் தவறவிட்டார். அதனால் அந்த பந்து அவருடைய காலில் பட்டதால் எல்பிடபிள்யூ கேட்க வேண்டிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உட்பட அனைத்து இந்திய வீரர்களும் அதை கவனிக்காமல் கோட்டை விட்டனர்.

- Advertisement -

ஆனால் அடுத்த ஓவரிலேயே அந்தப் பந்தை பற்றிய அலசல் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது ஸ்டம்ப் மீது பந்து பட்டது தெரிந்தது. அதனால் இந்தியா ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட் கிடைத்திருக்கும் என்பதும் தெரிய வந்தது. அதை வர்ணனை செய்து கொண்டிருந்த முரளி கார்த்திக், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டினர். மேலும் “தோனி ரிவியூ சிஸ்டம்” என்று ரசிகர்கள் கூறுவது போல் டிஆர்எஸ் எடுப்பதில் கில்லாடியான தோனி அந்த சமயத்தில் இருந்திருந்தால் விழிப்புடன் ரிவ்யூ எடுத்திருப்பார் என்று ரவி சாஸ்திரி வெளிப்படையாகவே கூறினார்.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

ஒருவேளை ரிவியூ எடுக்கப்பட்டிருந்தால் 61 ரன்கள் எடுத்து கேமரூன் கிரீன் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்திருக்க மாட்டார். இது பற்றி நேரலையில் அந்த 3 முன்னாள் வீரர்களும் விவாதித்த போது தினேஷ் கார்த்திக் உட்பட அனைவராலும் தோனியாக முடியாது என்பது போல் ரவி சாஸ்திரி பேசிய உரையாடல்கள் பின்வருமாறு:
கவாஸ்கர் பேசியது: அது நேரான பந்து, அதை அவர் (க்ரீன்) ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால் தவற விட்டதால் ஸ்டம்ப் மீது பந்து பட்ட போதிலும் இந்தியா ரிவியூ எடுக்கவில்லை.

- Advertisement -

Shastri

சாஸ்திரி பேசியது: அடித்ததா? சந்தேகமே இல்லை, அது தெளிவாக ஸ்டம்ப்பை அடித்தது. அந்த பந்தில் அவர் அக்ராஸ் விளையாடியது ஆச்சரியமாக இருந்தது.

முரளி கார்த்திக் பேசியது: நாம் கேமராக்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சஹால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பெரிய திரையில் அதை பார்த்ததும் தவறவிட்டு விட்டோமே என்ற வகையில் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது அவர்களை நான் திட்டியிருக்கலாம் என்று விரும்புகிறேன்.

இதையும் படிங்க : அவரு மட்டுமா தப்பு பண்ணாரு. இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் இவைதான் – அஜய் ஜடேஜா வெளிப்படை

சாஸ்திரி பதிலளித்தது: அதனால் தான் கீப்பர்களின் வேலை முக்கியமானதாகும். அதில் தான் எம்எஸ் தோனி மிகவும் சிறந்தவர்.

Advertisement