அவரு மட்டுமா தப்பு பண்ணாரு. இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் இவைதான் – அஜய் ஜடேஜா வெளிப்படை

Ajay-Jadeja
Advertisement

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் அந்த இலக்கினை வைத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியாதது அணியின் மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

அதோடு இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அணி தேர்வு மற்றும் ரோகித்தின் மோசமான கேப்டன்சியும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மொஹாலி மைதானம் ஹை ஸ்கோரிங் மைதானமாக இருந்தாலும் 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்த வேளையில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அந்த தோல்விக்கு ரோகித் சர்மா மட்டும் காரணம் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி மொஹாலியில் நடைபெற்ற முதலாவது t20 போட்டியில் எந்த வித திட்டத்தையும் சரியாக செயல்படுத்தவில்லை. துவக்கத்திலேயே விக்கெட்டை எடுக்க தவறிய இந்திய வீரர்கள் விக்கெட்டை எடுத்த போதிலும் ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுத்தனர்.

Bhuvi

அந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இருந்தாலும் இறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு தனிப்பட்ட ஒரு நபரை குறி வைத்து பேசுவது தவறான ஒரு விஷயம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அக்சர் பட்டேல் அந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி ரன்களை குறைவாக கொடுத்தது மட்டுமின்றி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

- Advertisement -

அவரை போன்று மற்ற பவுலர்களும் டைட்டாக பந்து வீசி இருந்தால் நிச்சயம் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இந்த தோல்விக்கு ரோகித் சர்மாவை மட்டும் வைத்து பேசுவது தவறான ஒன்று. ஆஸ்திரேலியா அணி அந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து விட்டனர். அது மட்டும் இன்றி இந்திய அணி சில கேட்ச்களை தவறவிட்டதும், பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டதுமே அந்த தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன்.

இதையும் படிங்க : 3 விதமான கிரிக்கெட்டிலும் அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் – சபா கரீம் வேண்டுகோள்

மொஹாலி மைதானத்தில் ரன்கள் நிறைய வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவ்வளவு பெரிய இலக்கினை வைத்து சிறப்பாக பந்துவீசி இருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இப்படி இந்திய அணி பெற்ற அந்த ஒரு தோல்விக்கு ஒரு சில காரணங்களை மட்டுமே கூறுவது தவறு. நிச்சயம் இந்திய அணி இந்த சரிவிலிருந்து இரண்டாவது போட்டியில் மீண்டு வரும் என அஜய் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement