அன்று இந்தியாவை சைலன்ட் பண்ண மாதிரி.. இன்று இங்கிலாந்தை முடிச்சுட்டீங்க.. ஹெட்டை பாராட்டிய சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. பெர்த் மைதானத்தில் நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய அப்போட்டி வெறும் 2 நாட்களில் முடிந்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து 132 ரன்களுக்கு சுருட்டி 40 ரன்களை முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா மீண்டும் திணறலாக பேட்டிங் செய்து தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பெர்த் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

- Advertisement -

இந்தியாவைப் போல இங்கிலாந்தை:

ஆனால் அப்போது வித்தியாசமாக சிந்தித்த ஆஸ்திரேலிய அணி தங்களது அதிரடி நாயகன் டிராவிஸ் ஹெட்டை முதல் முறையாக சொந்த மண்ணில் ஓப்பனிங்கில் (டெஸ்ட் கிரிக்கெட்டில்) களமிறக்கியது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய ஹெட் 69 பந்துகளில் சதத்தை அடித்தார். அத்துடன் 16 பவுண்டரி 4 சிக்ஸரை 123 (83) ரன்களை 148 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஆஸ்திரேலியாவை பெற வைத்த அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன், வெற்றிகரமான சேசிங்கில் வேகமான சதத்தை அடித்த பேட்ஸ்மேன் என்ற இரட்டை உலக சாதனைகளையும் ஹெட் படைத்தார். இந்நிலையில் 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதே போன்ற அதிரடியான சதத்தை அடித்த ஹெட் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை சைலண்ட் செய்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நொறுக்கிய ஹெட்:

அதே போல இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய ஹெட் இங்கிலாந்தை தோற்கடித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் சாஸ்திரி பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட். நீங்கள் 2 வருடங்களுக்கு முன் எங்களுடைய நாட்டை அமைதியில் மூழ்கடித்தீர்கள்”

இதையும் படிங்க: வெறும் கழுத்து வலி மட்டுமில்ல.. சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

“இன்று மீண்டும் அதை நீங்கள் செய்துள்ளீர்கள். அதை நீங்கள் கிரிக்கெட்டின் சிறந்த ஃபார்மட்டான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸை விளையாடி அதிரடியான ஸ்டைலில் செய்துள்ளீர்கள். அதற்காக தலைவணங்குகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக இது மிகவும் ஸ்பெஷலான ஆட்டம்” என்று பதிவிட்டுள்ளார். இதே போல ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் ஹெட்டை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement