இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் 5வது டி20 போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்கியது. அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 231/5 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக திலக் வர்மா 73, ஹர்டிக் பாண்டியா 63, சஞ்சு சாம்சன் 37, அபிஷேக் சர்மா 34 ரன்கள் அடித்தார்கள். குறிப்பாக 16 பந்தில் 50 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக 2வது வேகமான அரை சதத்தை அடித்த வீரராக சாதனை படைத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கம்பேக்கில் அசத்திய சாம்சன்:
முன்னதாக இப்போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் காயமடைந்ததால் சஞ்சு சாசனுக்கு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் பவர்பிளேவில் பட்டாசாக விளையாடிய அவர் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 (22) ரன்களை 168 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அதிலிருந்து சுப்மன் கில்லை விட ஓப்பனிங்கில் சாம்சன் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.
அதைப் பார்த்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இவரையா பெஞ்சில் அமர வைத்தீர்கள் என்று கௌதம் கம்பீரை மறைமுகமாக சாடினார். அத்துடன் ஓப்பனிங்கில் எதிரணிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் விளையாடக்கூடிய அவரை இப்போட்டியில் விதி சுப்மன் கில்லை காயமடைய வைத்து கம்பேக் கொடுக்க வைத்துள்ளதாகவும் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நேரலையில் கொட்டிய சாஸ்திரி:
அத்துடன் மிடில் ஆர்டரில் விளையாட வைப்பதை விட சுப்மன் கில்லுக்கு பதிலாக சாம்சனை ஓப்பனிங்கில் விளையாட வைத்தால் இந்திய அணிக்காக நல்ல துவக்கத்தைக் கொடுப்பார் என்றும் அவர் கம்பீருக்கு அறிவுரை தெரிவித்தார். இது பற்றி நேரலையில் ரவி சாஸ்திரி வர்ணித்தது பின்வருமாறு. “சாம்சன் இப்படி பேட்டிங் செய்வதை பார்க்கும் போது, சில நேரங்களில் நீங்கள் இவர் ஏன் இந்திய அணியில் முதலாவதாக இடம் பெறவில்லை? என்று சிந்திப்பீர்கள்”
இதையும் படிங்க: இந்தியா 231 ரன்ஸ்.. 16 பந்தில் 50.. பட்டைய கிளப்பிய பாண்டியா.. அபிஷேக்கை முந்தி சரவெடி சாதனை
“ஏன் மற்றொருவருடைய காயம் இவரைக் கொண்டு வந்துள்ளது? என்று நினைப்பீர்கள். டாப் ஆர்டரில் விளையாடுவதே சாம்சனுக்கு இயற்கையான இடமாகும். அங்கே ஏற்கனவே அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடுத்தடுத்த சதங்கள் அடித்துள்ளார். அந்த வகையில் சாம்சன் வெடிக்கக்கூடிய ஆபத்தான வீரர்” என்று தெரிவித்தார்.



