இந்தியா 231 ரன்ஸ்.. 16 பந்தில் 50.. பட்டைய கிளப்பிய பாண்டியா.. அபிஷேக்கை முந்தி சரவெடி சாதனை

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. அதில் 4 போட்டிகள் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் கடைசிப் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 5.4 ஓவரில் 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அபிஷேக் சர்மா அதிரடியாக 34 (21) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து மறுபுறம் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தம்முடைய பங்கிற்கு 37 (22) ரன்களை விளாசி அவுட்டானார்.

- Advertisement -

பாண்டியாவின் மாஸ் ஆட்டம்:

சொல்லப்போனால் கடைசி 18 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறிய சுப்மன் கில்லை விட 168 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் தனது கம்பேக் போட்டியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி கௌதம் கம்பீருக்கு திறமையைக் காட்டினார். ஆனால் அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் 5 (7) ரன்னில் அவுட்டாகி இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்பதை காண்பித்தார்.

இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா தென்னாப்பிரிக்க பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அவருடன் எதிர்புறம் கைகோர்த்த ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்க பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்டு அடித்து நொறுக்கினார். தொடர்ந்து பட்டைய கிளப்பிய பாண்டியா வெறும் 16 பந்தில் அரை சதமடித்து தெறிக்க விட்டார்.

- Advertisement -

16 பந்தில் அரை சதம்:

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது வேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் பாண்டியா படைத்துள்ளார். இதற்கு முன் இதே வருடம் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. 2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: 2026 டி20 உ.கோ இந்தியா ஜெய்க்க.. இந்த திட்டங்களை உருவாக்கி வரேன்.. கண்டிப்பாக அசத்துவேன்.. வருண் நம்பிக்கை

தொடர்ந்து அசத்திய பாண்டியா 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 63 (25) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் இணைந்து மறுபுறம் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மாவும் அரை சதமடித்து 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 73 (42) ரன்களை விளாசி ரன் அவுட்டானார். இறுதியில் சிவம் துபே 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 10* (3) ரன்களை விளாசி விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 231/5 ரன்களை குவித்து மிரட்டிய நிலையில் தெனாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement