இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே காயமடைந்து ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ் பரத் அறிமுகமானார்.
அதேபோன்று மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட முடியாததால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அறிமுகவீரராக வாய்ப்பினை பெற்றார். இந்த இருவருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான அறிமுக தொப்பியை வழக்கும் நிகழ்ச்சி போட்டிக்கு முன்னர் பிரமாதமாக நடைபெற்று முடிந்தது.
SKY makes his TEST DEBUT as he receives the Test cap from former Head Coach @RaviShastriOfc 👏 👏
Good luck @surya_14kumar 👍 👍#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/JVRyK0Vh4u
— BCCI (@BCCI) February 9, 2023
அதில் கே எஸ் பரத்திற்கு இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா அறிமுக தொப்பியை வழங்கி பாராட்டினார். அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக திகழும் சூரியகுமார் யாதவுக்கு அறிமுக தொப்பியை ரவி சாஸ்திரி வழங்கியது பெருமளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஏனெனில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த அவரை தற்போது வர்ணனையாளராக இருந்தாலும் சரி அவர் தான் சரியான நபர் என அணியின் நிர்வாகம் அவரை அழைத்து கவுரவித்து சூரியகுமாருக்கு அறிமுக தொப்பியை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. அதனை ஏற்றுக்கொண்ட ரவி சாஸ்திரியும் சூரியகுமார் யாதவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்க்கான அறிமுக தொப்பியை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க : வீடியோ : 2 ஆண்டுகள் கழித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தோனி – என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க
இது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஏற்கனவே ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த சமயத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.