- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதான் டர்னிங் பாய்ண்ட்.. இன்னும் ஒன்னு இருக்கு.. விருது வழங்கிய ரவி சாஸ்திரிக்கு.. நினைவூட்டிய விராட் கோலி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 84, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ராகுல் 42* ரன்கள் எடுத்து வெற்றி பெற உதவினர்.

அதனால் ஆஸ்திரேலியாவில் இந்தத் தொடரிலிருந்து நாக் அவுட் செய்த இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் இந்தத் தொடரின் ஃபைனலுக்கு முதல் அணியாகவும் இந்தியா தகுதிப் பெற்று அசத்தியது. முன்னதாக 2023 உலகக் கோப்பை முதல் இந்திய அணியில் சிறந்த ஃபீல்டருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

சிறந்த ஃபீல்டர்:

அந்த வரிசையில் இந்தப் போட்டியில் அவ்விருதுக்கு சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பரிந்துரைக்கப்படுவதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் தெரிவித்தார். அதில் வெற்றியாளரை அறிவிக்க முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு விருந்தினராக வந்துள்ளதாகவும் அவர் கூறினார். அதைக் கேட்டதும் இந்திய அணியினர் ஆரவாரம் செய்து கைதட்டல் கொடுத்து தங்களது முன்னாள் பயிற்சியாளரை வரவேற்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட சாஸ்திரி 48வது ஓவரில் 61 ரன்கள் அடித்து சவாலை கொடுத்துக் கொண்டிருந்த அலெக்ஸ் கேரியை துல்லியமாக ரன் அவுட் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டிக்கான சிறந்த ஃபீல்டர் விருதை வெல்வதாக அறிவித்தார். அதுவே இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா எக்ஸ்ட்ரா 10 – 20 ரன்கள் எடுப்பதை தடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும் சாஸ்திரி கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்ருமாறு.

- Advertisement -

நினைவூட்டிய கோலி:

“இது அழுத்தமான போட்டி. இந்தியா அந்தத் தொடரில் மிகவும் சிறந்த அணியாக செயல்பட்டு வருகிறது. தனிநபர்களின் செயல்பாடு உங்களைக் குறிப்பிட்டு அளவு மட்டுமே எடுத்துச் செல்லும். ஆனால் சாம்பியன்கள் விளையாடும் போது அணியாக செயல்படுவதே உங்களை கோட்டைத் தாண்ட வைக்கும். இன்று 2 சாம்பியன்கள் விளையாடிய அழுத்தமானப் போட்டியில் போராடும் குணத்தைக் காண்பித்தார்கள்”

இதையும் படிங்க: இந்தியாவிடம் தோல்வி.. ஓய்வு பெற்ற 2 முறை சாம்பியன் ஸ்டீவ் ஸ்மித்.. காரணம் என்ன? சுயநலமற்ற அறிவிப்பு

“களத்தில் மின்னலைப் போல் ஏற்படுத்தும் தாக்கம் தான் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். பொதுவாக அது திருப்புமுனையாகும்” என்று கூறினார். இறுதியில் ரவி சாஸ்திரிவை கொடுத்து விட்டு இந்திய வீரர்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது விராட் கோலி “இன்னுமொரு போட்டி இருக்கு” என்று ரவி சாஸ்திரிக்கு நினைவூட்டினார். அதாவது ஃபைனல் போட்டியிலும் வெல்வோம் அப்போதும் வாருங்கள் என்று விராட் கோலி தெரிவித்தார்.

- Advertisement -