இந்தியாவிடம் தோல்வி.. ஓய்வு பெற்ற 2 முறை சாம்பியன் ஸ்டீவ் ஸ்மித்.. காரணம் என்ன? சுயநலமற்ற அறிவிப்பு

Steve Smith 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனல் மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அதில் வலுவான உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் ஆஸ்திரேலியாவை இந்தத் தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்து அசத்தியது.

மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஃபைனலுக்கு முதல் அணியாகவும் இந்தியா தகுதி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் 170 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

ஸ்மித் ஓய்வு:

அதில் 12 சதங்கள் அடித்துள்ள அவர் 5800 ரன்களை 43.06 என்ற சராசரியில் குவித்துள்ளார். 2015 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்வதற்கு இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் சதத்தை அடித்து ஸ்மித் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. மேலும் 2023 உலகக் கோப்பையையும் வென்ற அவர் 2 முறை உலகச் சாம்பியனாக சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் தற்போது 35 வயதாகும் அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பைக்கு தமது இடத்தில் இளம் வீரர்கள் விளையாடும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுயநலமின்றி அறிவித்துள்ளார். அதே சமயம் டி20 கிரிக்கெட்டிலும் தமக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளதாக ஸ்மித் கூறியுள்ளார்.

- Advertisement -

சுயநலமற்ற முடிவு:

இது பற்றி அவர் தனது ஓய்வு அறிவிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்த சிறந்த பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியாக பயணித்தேன். அதில் நிறைய அற்புதமான நேரங்களும் நினைவுகளும் இருந்தன. 2 உலகக் கோப்பைகளை வென்றது எனது கேரியரில் உச்சமான நிகழ்வு. அதே போல எனது சக வீரர்களுடன் பயணித்தது மறக்க முடியாத தருணங்கள்”

இதையும் படிங்க: தொட்டில்லயே தூங்காம வளருங்க.. பாகிஸ்தானா இருந்தாலும் இந்தியா இதையே செஞ்சுருக்கும்.. கம்பீர் பதிலடி

“இது 2027 உலகக் கோப்பைக்கு எங்கள் வீரர்கள் தயாராக இது சரியான தருணம். அவர்களுக்கு வழி விடுவதற்கு இது சரியான நேரம் என்று கருதினேன். டெஸ்ட் போட்டிகள் இப்போதும் எனக்கு பிடித்தது. எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாட உள்ளேன். அந்தப் பார்மட்டில் இன்னும் எனது அணிக்காக நிறைய பங்காற்ற முடியும் என்று கருதுகிறேன்” எனக் கூறினார். அவருக்கு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement