3 ஆவது இந்திய வீரராக தனித்துவமான சாதனையுடன் டி20 கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Shreyas Iyer Captain
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது கைப்பற்றி அசத்தியது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய வேளையில் அதற்கடுத்த தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அடுத்தடுத்த டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

3 ஆவது இந்திய வீரராக தனித்துவ சாதனையுடன் கேப்டன் பதவியை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் :

இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரினை அதிகமுறை (3) வென்ற அணியாகவும், அடுத்தடுத்த டி20 உலககோப்பை தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் இந்திய அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தது. அதனை தொடர்ந்து 2028 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிரடியாக அணியிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார்.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் : தற்போது 35 வயதை எட்டியுள்ள அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்திய அணியின் அடுத்த கட்ட நகர்வுகளை கருத்தில் கொண்டும் சூரியகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டார். அதே வேளையில் அவருக்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிகளில் அற்புதமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் இந்திய அணியில் கிடைத்தது. அதுமட்டுமின்றி கேப்டனாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனது முதல் போட்டியில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். இதன் மூலம் சில தனித்துவமான சாதனைகளை டி20 போட்டிகளில் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : அதிக டி20 போட்டிகளில் விளையாடிய பிறகு கேப்டனாக மாறிய வீரர் என்ற சாதனையை தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த ஏமாற்றம்.. டாசுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் – எடுத்த முடிவு

சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் மொத்தமாக 114 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் இன்று கேப்டனாக தனது அறிமுக வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமின்றி அதிக வயதில் இந்திய அணிக்காக டி20 கேப்டனாக பொறுப்பேற்ற வீரர் என்ற பட்டியலில் ஷிகர் தவான் (35 வயது), சூர்யகுமார் யாதவ் (33 வயது) ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக தனது 31-வது வயது 202-வது நாளில் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement