- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்காதது ஏன்? – ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியின் போது 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தது.

வைபவ் சூர்யவன்ஷி விளையாடாதது ஏன்? – ஷ்ரேயாஸ் ஐயர் பதில்

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்த வைபவ் சூரியவன்ஷி இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ அணியிலும் இடம் பெற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இவ்வேளையில் இந்த முதலாவது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை என கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாசின் போது தெரிவித்து விட்டு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இல்லை. அவர் ஒரு சிறப்பான வீரர் தான் இருந்தாலும் நமது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு தொடர்களாக இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை டி20 போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த ஏமாற்றம்.. டாசுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் – எடுத்த முடிவு

எனவே அனுபவ வீரர்களான அவர்களை நாம் ஆதரிக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாகவே இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் இல்லை. நிச்சயம் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் இந்திய அணிக்காக அறிமுகமாவார் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -