- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஓய்வு பெற சரியான நேரம்.. ரோஹித் கடைசி மேட்ச்லயாவது இதை செய்யனும்.. சாஸ்திரி அட்வைஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இருக்கும் அந்தத் தொடரின் கோப்பையை குறைந்தபட்சம் தக்க வைத்துக்கொள்ள கடைசி போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.

ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியிலிருந்து ரோகித் சர்மா தலைமையில் இந்தியா திண்டாடி வருகிறது. அதற்கு ரோகித் சர்மா பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காததும் கேப்டனாக சுமாராக செயல்படுவது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஓய்வுக்கான நேரம்:

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடும் ரோஹித் சர்மா ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் கடைசி போட்டியில் ஆனதாகட்டும் என்ற வகையில் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் போராட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு.

“நான் ரோஹித் சர்மாவின் அருகில் இருந்தால் களத்திற்கு சென்று அதிரடியாக விளையாடுங்கள் என்று சொல்வேன். அவர் களத்திற்கு சென்று அதிரடியாக மட்டும் விளையாட வேண்டும். ஏனெனில் தற்சமயத்தில் அவரால் மெதுவாக நன்றாக விளையாட முடியவில்லை. எனவே எதிரணியை அவர் அட்டாக் செய்து என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும்”

- Advertisement -

சாஸ்திரி அட்வைஸ்:

“2024இல் 40 என்ற சராசரியில் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ரோஹித் சர்மா வழி விட்டு ஓய்வு பெற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அது அவருடைய சொந்த முடிவு. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றிருந்தால் அது வேறு கதையாக இருந்திருக்கும். இல்லையெனில் ரோகித் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும்”

இதையும் படிங்க: ஆஸியில் திணறும் ரோஹித், மாஸ்டர் விராட் கோலி அடுத்த ஐசிசி தொடரில் அசத்துவாங்க.. ஷேன் வாட்சன்

“பந்தை எதிர்கொள்வதில் அவர் கொஞ்சம் தாமதப்படுகிறார் என்று நினைக்கிறேன். எனவே ரோஹித் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். களத்திற்கு சென்று அதிரடியாக விளையாடி போட்டியை வெல்ல பார்க்க வேண்டும்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து கடைசி போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -