ஆசியக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்த ரவி சாஸ்திரி மற்றும் எம்.எஸ்.கே பிரசாத்

Asia-Cup
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்தது.

அதனை தொடர்ந்து பும்மரா தலைமையிலான மூன்றாம் தர இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்தியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் பெரும்பாலானோர் உலக கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளம் மூலமாக வீடியோ கான்பரன்ஸ்ங்கில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில், எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு தற்போது இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சாம்சன மட்டும் குறை சொல்லாதீங்க, விராட், ரோஹித் அந்த எத்தனை மேட்ச்ல ஆடுனாங்க? கபில் தேவ் நெத்தியடி கேள்வி

அதன்படி அவர்கள் தேர்வு செய்த ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :
1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ரோஹித் சர்மா, 5) திலக் வர்மா, 6) சூரியகுமார் யாதவ், 7) ஹார்டிக் பாண்டியா, 8) ரவீந்திர ஜடேஜா, 9) அக்சர் படேல், 10) ஷர்துல் தாகூர், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) குல்தீப் யாதவ், 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement