- Advertisement -
இந்திய கிரிக்கெட்

48 மணி நேரம் தான் இருக்கு.. ஆஸிக்கு எதிரா இந்த 2 விஷயத்தை செஞ்சா இந்தியா ஜெயிக்கும்.. சாஸ்திரி அட்வைஸ்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனலில் இந்தியா மற்றும் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களால் இத்தொடரை துபாயில் விளையாடும் இந்தியா தங்களது குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை தோற்கடித்தது. குறிப்பாக மிகவும் வலுவான நியூசிலாந்தை மார்ச் 2ஆம் தேதி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அதனால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவை செமி ஃபைனலில் சந்திக்கிறது. அந்தப் போட்டி மார்ச் 4ஆம் தேதி இதே துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. கடைசியாக 2023 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் ரோகித் தலைமையில் மிரட்டில் இந்தியா 10 வெற்றிகளுடன் ஃபைனலுக்கு சென்றது.

- Advertisement -

செமி ஃபைனலில் ஆஸி:

அதனால் உச்சகட்ட ஃபார்மில் இருந்த இந்தியா கோப்பையை முத்தமிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபைனலில் இந்தியாவை மடக்கிய ஆஸ்திரேலியா 6வது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. 2003 உலகக்கோப்பை முதல் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரை ஆஸ்திரேலிய அணி எப்போதுமே இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை இம்முறை எப்படி தோற்கடிக்கப் போகிறோம் என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த அடுத்த 48 மணி நேரத்திற்குள் அதே துபாயில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் செய்யக்கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

சாஸ்திரி அட்வைஸ்:

மேலும் பேட்டிங்கில் 240 – 250 ரன்களை எடுத்தால் கண்டிப்பாக இந்தியா வெல்ல முடியும் என்று சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் அதே பிளேயிங் லெவனுடன் செல்வேன். ஏனெனில் அந்தப் போட்டி அதே மைதானத்தில் 48 மணி நேரத்தில் நடைபெறுகிறது. பிட்ச் கொஞ்சம் சோர்வாக காணப்படுகிறது. இப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து வீரர்கள் ஓடிய ஏதோ ஒரு பக்கவாட்டில் இருந்த மற்றொரு பிட்ச் அந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும்”

இதையும் படிங்க: செமி பைனல்ல வருண் சக்ரவர்த்தி ஆடியே ஆகினும்.. காரணத்தை கூறிய ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

“எனவே ஸ்பின்னர்கள் மீண்டும் அங்கே அசத்துவார்கள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்து 240 – 250 ரன்களுக்கு மேல் அடித்து விட்டால் செமி ஃ பைனல் போன்ற அழுத்தமான போட்டியில் அதுவே எதிரணிக்கு சவாலான இலக்காக இருக்கும்” என்று கூறினார். இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியும் கமின்ஸ், ஸ்டார்க் போன்ற முக்கிய பவுலர்கள் இல்லாமல் கொஞ்சம் தடுமாறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -